மேலும் அறிய
மதுரை: ஆடைக்குள் 17 கஞ்சா பொட்டலம்..... சிறையில் மகளுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தாய் கைது..!
பெண் சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தாய் கைது, அதே போல் பழங்கள் பறிக்கும் முயன்ற விசாரணை கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே தகராறு - மதுரை மத்திய சிறை செய்திகள்.
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுசிலா மேரி, இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய பெண்கள் சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தாய் பாத்திமா மேரி மதுரை சிறை வந்துள்ளார். அப்போது தாய் பாத்திமா மேரியை சிறை பெண் காவலர்கள் சோதனை செய்தபோது அவர் ஆடைக்குள் சுமார் 17 சிறிய பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சோதனை செய்த காவல்துறையினர் தாய் பாத்திமா மேரியை கரிமேடு காவல்துறையில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக சிறை வளாகத்திற்குள் கஞ்சா பொட்டலங்களை கொண்டு செல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் சிறையில் உள்ள மகளைக் காண வந்த தாய் கஞ்சா பொட்டலங்கள் விநியோகம் செய்ய முயன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல், மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் சிறை என இரண்டு வளாகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 1500க்கு மேற்பட்ட சிறை கைதிகள் இந்த வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட பழவகை மரங்கள் வைக்கபட்டு பராமரிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் விசாரணை கைதிகள் உள்ள வளாகத்தில் உள்ள மரங்களில் உள்ள நாவல் பழங்களை பறிப்பதற்காக அங்கு இருக்கக்கூடிய விசாரணை கைதிகள் சிலர் கற்களை விட்டு எறிந்து பழங்களை பறிக்க முயன்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்த கற்கள் ஆனது சக கைதிகள் மீதும் சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் மீதும்விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்திய காவலர்கள் பழங்களை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதனால் காவலர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கைதிகள் சிறை வாசலை முன் பகுதிக்கு வந்து சத்தம் போட்டு கூச்சலிட்டு இருக்கிறார்கள். இதனால் அப்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து சிறை அறையில் அடைத்தனர். ஏற்கனவே மதுரை மத்திய சிறையில் கடந்த ஆண்டு இரண்டு முறை கைதிகள் ரகளை ஈடுபட்ட நிலையில் தற்போது பழம் பறிப்பதில் மூன்றாவது முறையாக கைதிகள் ரகளை ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரகளை ஈடுபட்ட கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கையை அடுத்த பையூரில் பெருங்கற்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion