Siddharth threat calls நடிகர் சித்தார்த்துக்கு அடுத்தடுத்து கொலை மிரட்டல்
கடந்த 24மணி நேரத்தில் 500 தொலைபேசி மிரட்டல்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வந்ததாக நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார் .
கடந்த சில நாட்களாக நடிகர் சித்தார்த்தின் டுவீட்கள் இணையத்தில் வைரலாக இருந்தது . உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் அமித்சாவை தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வந்தார்.

My phone number was leaked by members of TN BJP and @BJPtnITcell
Over 500 calls of abuse, rape and death threats to me & family for over 24 hrs. All numbers recorded (with BJP links and DPs) and handing over to Police.

I will not shut up. Keep trying.@narendramodi @AmitShah
— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021

இந்நிலையில் நேற்று யாரோ அவரின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட தொலைபேசி மிரட்டல் விடுத்து வருவதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் . "தன்னையும் தன் குடும்பத்தாரையும் பாஜகவினர் சிலர் மிரட்டி வருவதாகவும், வந்த அனைத்து அழைப்புகளும் தன்னிடம் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்தையும் போலீஸிடம் ஒப்படைத்து இருப்பதாகவும்’ டுவிட் செய்துள்ளார். இந்த டுவிட் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது .