மேலும் அறிய

சாலையின் குறுக்கே எது இருந்தாலும் அப்படியே சாலையை  போடும் ஊழியர்கள் - மயிலாடுதுறையில் தொடரும் அவலம் 

சீர்காழி அருகே சாலையில் கிடந்த கருங்கல் தூண் மற்றும் உடைந்த மின் கம்பத்தை அகற்றாமலும் சாலை அமைக்கப்பட்ட நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரண்டு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சாலையில் கிடந்த கருங்கல் தூண் மற்றும் உடைந்த மின் கம்பத்தை அகற்றாமலும் சாலை அமைக்கப்பட்ட நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை அமைப்பதில் அலட்சியம் 

தமிழகத்தில் சமீப காலமாக ஆங்காங்கே, சாலையில் நிறுத்தப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அகற்றாமல் அதனை சாலை நடுவில் வைத்து புதிதாக சாலைகள் போடுவதும், தண்ணீர் அடி பம்புகளை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமல் சாலை போட்டுவது, மின்கம்பத்தை சாலையோர மாற்றி நடாமல் சாலையில் நடுவில் வைத்து புதிய சாலை அமைப்பது போன்ற தொடர் சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

சாலையின் குறுக்கே எது இருந்தாலும் அப்படியே சாலையை  போடும் ஊழியர்கள் - மயிலாடுதுறையில் தொடரும் அவலம் 

மயிலாடுதுறை ஒர் நிகழ்வு 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றும், அதனை சரி செய்யாமல், மீண்டும் மீண்டும் அதே போன்ற தவறுகளை ஊழியர்கள் செய்து வருகின்றனர். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையின் குறுக்கே எது இருந்தாலும் அப்படியே சாலையை  போடும் ஊழியர்கள் - மயிலாடுதுறையில் தொடரும் அவலம் 

அகற்றப்படாத கருங்கல் தூண்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து நிம்மேலி செல்லும் சாலை முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  2 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1.6 மீட்டர் விரிவாக்கம் செய்து புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில் உள்ள இரட்டை வாய்க்கால் மதகு அருகே மிகப்பெரிய பாறாங்கல்  தூண் ஒன்று கிடந்தது, அதனை சாலை அமைக்கும் ஊழியர்கள் அப்புறப்படுத்தாமல் அதனை வைத்தே புதிய சாலையை அமைத்துள்ளனர். 

சாலையின் குறுக்கே எது இருந்தாலும் அப்படியே சாலையை  போடும் ஊழியர்கள் - மயிலாடுதுறையில் தொடரும் அவலம் 

அகற்றப்படாத மின்கம்பம் 

அதேபோன்று சாலை விரிவாக்க பணிக்காக அப்பகுதியில் உள்ள பழைய மின்கம்பம் உடைக்கப்பட்டு சாலையில் கிடந்த நிலையில் அதை சாலையில் இருந்து அப்புறப்படுத்தாமல் உடைந்த மின்கம்பத்தை வைத்து சாலை அமைத்துள்ளனர். புதிய சாலையோரம் ஆபத்தான முறையில் கருங்கல் தூண் மற்றும் மின்கம்பம் இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சாலையோரம் இவைகள் இருப்பது தெரியாத நிலையில்,  சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் விபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. ஆகையால் புதிய சாலையில் ஆபத்தான முறையில் உள்ள கருங்கல் தூண் மற்றும் உடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி, சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையின் குறுக்கே எது இருந்தாலும் அப்படியே சாலையை  போடும் ஊழியர்கள் - மயிலாடுதுறையில் தொடரும் அவலம் 

சமூக ஆர்வலர்கள் வேதனை 

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “மயிலாடுதுறை மாவட்டம் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இவ்வாறு அலட்சியமாக பணி செய்யும் ஊழியர்களை அதிகாரிகள் கடுமையான தண்டித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்ய தவறுவதால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஒருரே பகுதியில் இதுபோன்று இரு இடங்களில் சாலையில் உள்ளவற்றை அகற்றாமல் சாலை போடப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்கம்பங்களை மாற்றிய நிலையில் பழைய மின்கம்ங்களை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டு சென்றதும் பெரிய தவறு என்பதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget