மயிலாடுதுறையில் நடைபெற்ற சோதனையில் சிக்கிய பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்.. கைப்பற்றிய என்.ஐ.ஏ அதிகாரிகள்!
மயிலாடுதுறை தேரழுந்தூரில் நிசார் அகமது என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ மேற்கொண்ட சோதனையில் பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க், டைரி, செல்போன் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சென்னை கொண்டு சென்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தேரழந்தூரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2019ஆம் ஆண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்த பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் நகரச் செயலாளர் திருப்புவனம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த கொலையில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது.
ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணையில் அந்த வழக்கில் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அக்கொலை வழங்க தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறை தேரழுந்தூரில் தெற்கு பட்டக்கால் தெரு முகமது ரபிக் என்பவர் மகன் 44 வயதான நிசார் அகமது என்பவரது வீட்டில் சென்னையில் இருந்து தேசிய பாதுகாப்பு முகமை என் ஐ ஏ அதிகாரி துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
Naveen patnaik: ஏழை மக்களின் நாயகன்..ஊழல் எதிர்ப்பாளர்..சூப்பர் சி.எம்..யார் இந்த நவீன் பட்நாயக்?
அவரது தந்தை முகமது ரஃபிக் துபாயில் வேலை பார்த்து வரும் நிலையில், இவர் அண்மையில் துபாய் சென்று தந்தையை பார்த்து வந்ததாகவும். மேலும், கும்பகோணத்தில் சிசிடிவி கேமரா விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது கடையை மூடிவிட்டு வீட்டிலே இருப்பதாக காவல்துறை தெரிவித்தனர். தொடர்ந்து தேசிய பாதுகாப்பு முகமை என் ஐ ஏ அதிகாரிகள் 5 மணி நேர சோதனைக்கு பிறகு அவர் பயன்படுத்திய 2 பென் ட்ரைவ், 1 ஹார்ட் டிஸ்க், டைரி, செல்போன் உள்ளிட்டவை கைப்பற்றி சென்னை கொண்டு சென்றனர். மேலும், இந்த பகுதியில் குத்தாலம் ஆய்வாளர் ஜோதிராமன் தலைமையில் குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.