மேலும் அறிய

நிலமே இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு விவசாயக் கடன்; வட்டியோடு கட்டச்சொன்ன வங்கி!

நிலமே இல்லாத கூலி தொழிலாளர்களுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை வட்டியுடன் திரும்ப செலுத்த கூறி எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடைசியாக 38ஆவதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டம் மயிலாடுதுறை. இங்கு விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. முப்போகம் விளைவித்த இப்பகுதியில் தற்போது காவேரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால் பெரும்பாலும் நிலைத்தடி நீரைக் கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கூலி தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்.


நிலமே இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு விவசாயக் கடன்; வட்டியோடு கட்டச்சொன்ன வங்கி!


இந்நிலையில் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வங்கிகள் மூலம் விவசாய கடன்களும் வழங்கப்பட்டு, அழிந்து வரும் விவசாயத்தை காக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள், சுப்பிரமணியன். இவர்கள் இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். அதுமட்டுமின்றி அடுத்த வேளை உணவுக்கே, கூலி வேலையை நம்பிதான் இருவரும்  உள்ளனர்.

Vachathi: வாச்சாத்தி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை; தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு


நிலமே இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு விவசாயக் கடன்; வட்டியோடு கட்டச்சொன்ன வங்கி!

இப்படிப்பட்ட இருவருக்கும்  மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி அதிர்ச்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஜூன் மாதம் 12 -ஆம் தேதி கடிதம் ஒன்றை மயிலாடுதுறை பாரத ஸ்டேட் வங்கி இவர்களுக்கு அனுப்பி  உள்ளது. அந்த கடிதத்தில் அவர்கள்  இருவரும் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து தலா 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பயிர்க் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகையாக 1,86,831.56 ரூபாய் உள்ளது என்றும், ஜூன் 13 -ஆம் தேதியிலிருந்து பின்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

https://tamil.abplive.com/news/tamil-nadu/vachathi-violence-18-women-victims-also-get-government-jobs-rs-10-lakh-relief-high-court-order-142672


நிலமே இல்லாத கூலித் தொழிலாளர்களுக்கு விவசாயக் கடன்; வட்டியோடு கட்டச்சொன்ன வங்கி!

இதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளான பெருமாள் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர். விவசாய நிலமே இல்லாத தங்களுக்கு பயிர்க் கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்ததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும், எனவே, தங்கள் பெயரில் வங்கியில் மோசடியாக பணத்தைப் பெற்றுக் கொண்ட நபர்களின் மீதும், எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் மோசடியாக பயிர் கடன் கொடுத்த வங்கியின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், இதேபோல் தங்கள் பகுதியில் பலரும் இதுபோன்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Annamalai Delhi Visit: கூட்டணி முறிவு, பாஜக நிர்வாகிகள் கூட்டம்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை..?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget