மேலும் அறிய

தகாத உறவால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் - சீர்காழி அருகே சோகம்..!

சீர்காழி அருகே தகாத உறவு காரணமாக மாயமான சிறுமி உறவினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழி அருகே தகாத உறவு காரணமாக மாயமான சிறுமி உறவினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மாயமான பள்ளி மாணவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 38 வயது கூலி தொழிலாளி தனது உறவினர் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி, தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

Chennai Cyclones: பாவம்தான் தலைநகரம்! சென்னையை இதுவரை தாக்கியது இத்தனை புயல்களா? ஓர் அலசல்


தகாத உறவால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் - சீர்காழி அருகே சோகம்..!

போக்சோ வழக்கு பதிவு 

இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி சிறுமியை அவரது வீட்டில், உறவினரான கூலித் தொழிலாளி வந்து விட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து மீண்டும் 9 -ம் தேதி மீண்டும் சிறுமியும், அவரது உறவினரும் மாயமாகி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியும் சிறுமியும் தீவிரமாக தேடி வந்தனர். 

”இதுதான் பருவ மழையை எதிர்கொள்ளும் லட்சணமா?” திமுக அரசை சாடிய இராமதாஸ்..!


தகாத உறவால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் - சீர்காழி அருகே சோகம்..!

உறவினருடன் தற்கொலை செய்து கொண்ட சிறுமி

இதனை அறிந்து அவர் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருநகரி சாலையில் உள்ள மாந்தோப்பில் சிறுமியும் அவரது உறவினரும் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகாத உறவினால் 14 வயதான 9 -ம் வகுப்பு படிக்கும் சிறுமி, உறவினருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sachin Tendulkar:"20 வருசமா நாங்க கெத்து" 1999ல் நியூசிலாந்துக்கு எதிராக சம்பவம் செய்த சச்சின்! என்ன?

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

Number Plate History: நம்பர் பிளேட் அறிமுகமானது எந்த நாட்டில்? இந்தியாவிற்கு வந்தது எப்போது? நோக்கம் என்ன?

மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

TOP 10 NEWS: 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ரிலீஸ்! சென்னைக்கு ரெட் அலர்ட் - இதுவரை நம்மைச் சுற்றி!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget