கிருத்துவ திருச்சபைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - பாதிரியார் கைது
கிருத்துவ திருச்சபைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை ல் செய்து கொலை மிரட்டல் விடுத்த பாதிரியார் கைது.
மயிலாடுதுறை அருகே பெந்தக்கோஸ்தே கிருத்துவ திருச்சபைக்கு வந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை மிரட்டல் விடுத்த பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவாளபுத்தூர் புத்தகரம் மேல தெருவில் 58 வயதான பிலிப் விஜயேந்திரன் என்பவர் தமக்கு சொந்தமான (ஜி.எஸ்.ஆர்.எம்) பெந்தகோஸ்த் என்ற கிருத்துவ திருச்சபையின் (சர்ச்) பாஸ்ட்டராகப் பணி செய்து வருகிறார். அவரது சர்ச்சுக்கு அடிக்கடி வரும் 38 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 8 ஆம் தேதி மகளிர் தினத்தன்று கிருத்துவ திருச்சபைக்கு வந்து, தன் காலில் எலும்பு முறிந்து சரியாகாமல் வலி உள்ளதாக பிலிப் விஜயேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election 2024: கோவையில் போட்டியிடுவதை உறுதிசெய்த திமுக; வேட்பாளர் யார்? வெளியான தகவல்
சர்ச்சை ஒட்டியுள்ள வீட்டுக்கு செல் நான் வந்து மந்திரித்த எண்ணெய்யை தடவி விடுகிறேன் என விஜயேந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த பெண் வீட்டிற்குள் சென்றபோது அங்கு வந்த பாதிரியார் கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு காலில் எண்ணெய் தடவியுள்ளார். அத்துடன் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இதை யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
Election Commission: 6 மாநில உள்துறை செயலாளர்களுக்கு ஆப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி!
இதனை அடுத்து பாதிக்கப்பட்டப் பெண் அங்கிருந்து பயந்து சென்று மாதர்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறி கதறி அழுதுள்ளார். அக்கட்சியினர் உடனடியாக பாதிக்கப்பட்ட அப்பெண்ணை அழைத்துச் சென்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்று விசாரித்த காவல் ஆய்வாளர் நாகவள்ளி நடைபெற்ற சம்பவம் உண்மை என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டார். அதனை தொடர்ந்து ஜி.எஸ்.ஆர்.எம் பெந்தகோஸ்தே சபை பாதிரியார் பிலிப் விஜயேந்திரன் மீது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.