Crime: திருப்பதியில் இருந்து 22 கிலோ கஞ்சா கடத்தல் - சீர்காழியில் பறிமுதல்
திருப்பதியில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை திருச்சி ரயில்வே கஞ்சா தடுப்பு தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்படும் கஞ்சாவை பிடிப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும், கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் பெரியவர்கள் முதல் கல்லூரி, பள்ளி, மாணவர்கள் வரை அதிகளவில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வந்த பாமினி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக திருச்சி ரயில்வே கஞ்சா தடுப்பு தனிப்படை போலீசாருக்கு திடீர் தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து திருச்சி ரயில்வே கஞ்சா தடுப்பு தனிப்படை போலீசாருக்கு அந்த ரயில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சீர்காழி ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது ரயிலின் பின்புறத்தில் இருந்த முன்பதிவு இல்லாத பெட்டியில் கழிவறை அருகே இரண்டு டிராவல் பேக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை கண்டெடுத்த ரயில்வே போலீசார் அதனை சோதனை செய்தபோது அதில் 11 பொட்டலங்களில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Pugazh Apology: தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் புகழ்... காரணம் என்ன தெரியுமா?

இதனை அடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த திருச்சி இரும்பு பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை போலீசார் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உள்ள இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ரயில்வே போலீசார் முன்னிலையில் நாகை மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கஞ்சா கடத்திய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Kanchi Brahmotsavam: ‘வரதா வரதா.. வரம்தா வரதா’.... குவிந்த பக்தர்கள்..! வைகாசி பிரம்மோற்சவம்..!






















