போக்சோ வழக்கில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இளைஞர் - மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு
போக்சோ வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான கார்த்திக். இவர் கடந்த 2022 -ம் ஆண்டு 15 வயது மாணவியிடம் ஒருவரிடம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
போக்சோ வழக்கு
அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கார்த்திக் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
Republic Day Info: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
8 ஆண்டுகள் சிறை
இதனிடையே நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்த வழக்கில் பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்தது உறுதி செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து கார்த்திக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜராகி சிறப்பாக வாதாடி தண்டனையை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.
Noman Ali: 38 வயதில் ஹாட்ரிக்.. பாகிஸ்தான் சூழற்பந்து வீச்சாளாரின் அபார சாதனை...
தெரிந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தல்
குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அளிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரையும் கூற முடியாத நிலையில், ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

