மேலும் அறிய

மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அத்துமீறி அழிக்கப்படும் மலைக் குன்றுகளால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம்.

மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

கன்னியாகுமரி மாவட்டம் மலைகளும் குன்றுகளும் அடங்கிய ஏற்றத்தாழ்வு பகுதியான மிகவும் செழுமை வாய்ந்த பகுதிகளாகும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி தொடங்கும் குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளக் கொள்ளை ஜோராக நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கனிமவள கொள்ளைக்கு அனுமதி அளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் குமரி மாவட்டமும் வறட்சியின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

                                                                             சிதையும் குமரி மாவட்ட இயற்கை வளங்கள்

யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பாறைகள், மற்றும் கனிமவளங்களை பெயர்த்து எடுப்பதற்கு கனிமவளத்துறை அனுமதி அளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கனிமவள கொள்ளைக்கு துணபோனதாக சமீபத்தில் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவள அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் ரூ.10 லட்ச அபராதமும் விதித்தது.வரலாற்றுச் சிறப்பு மிக்க மேற்கண்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கனிமவள கொள்ளையர்களுக்கும் கனிம வள கொள்ளைக்கு துணை போன மற்றும் போகும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது.

மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

                                                                                          நான்குவழிச்சாலை

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகளுக்கு குமரியில் இருந்து மண் கிடைக்கவில்லை என்ற காரணத்தை கூறி பணிகள் கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் நான்கு வழி சாலை பணிகளுக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் கொண்டு வருவதற்காக மீண்டும் புதிதாக டெண்டர் விடப்பட்டு சமீபத்தில் பணிகள் தொடங்கியது. ஆனால் அதன் பின்னர் நான்கு வழி சாலை பணிகளுக்கு எனக்கூறி மீண்டும் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோத அனுமதி பெற்று மலைகளையும் மலை குன்றுகளையும் அழிக்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

                                                                                                 கல்குவாரி

குறிப்பாக திருவட்டார் அருகே கல்லு பாலம் பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உள்ள மலை குன்றை  உடைத்து பாறைகள் மற்றும் மண் என அனைத்தையும் எடுத்துச் செல்ல முயற்சித்து உள்ளனர். நான்கு வழி சாலை பணிக்கு என கனிமவளத்தை கூறு போட வந்த கும்பல்கள் கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த மலைக்குன்றை அழித்துவிட்டால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றும் மக்கள் வசிக்க இயலா பகுதியாக மாறிவிடும் என்றும் பொதுமக்கள் மனம் வருந்தினர். நான்கு வழி சாலை பணிக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் கொண்டு வருவதற்கு ஒப்பந்ததாரர்கள் அனுமதி பெற்று விட்டு தற்போது குமரி மாவட்டத்தில் அதிகாரிகளின் துணையோடு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

                                                                                        மலைக்குன்று 

நட்டாலம் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு சட்டவிரோதமாக அனுமதி கொடுத்ததாக கூறி அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்ட கஸ்தூரி ரங்கன் அறிக்கை படி மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை எண் 49/2003 ன்படி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட கனிமவள கொள்ளைக்கான அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுப்பதோடு திருவட்டார் அருகே கல்லுப்பாலம் மற்றும் பள்ளியாடி அருகே முருங்கை விளை உட்பட பல இடங்களில் நிலச்சரிவு அபாயத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கொடுக்கப்பட்டுள்ள மலைக் குன்றுகளை அழிக்கும்  சட்டவிரோதமான அனுமதிகளை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும்,குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் சரமாரியாக வெட்டப்படும் கனிமவளம் - குமரியில் நிலச்சரிவு அபாயம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
"தமிழர்களின் சுயமரியாதை" தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கொதித்த கார்கே!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
Embed widget