Mangaluru: கோயில் உண்டியல்களில் ஆணுறை காணிக்கை செலுத்தி வந்த கிறிஸ்தவ ஊழியர் கைது!
குப்பைத் தொட்டிகளில் கிடந்த ஆணுறைகளை கோயில், மசுதி உண்டியல்களில் போட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரில் உள்ள கோயில்களின் உண்டியல்கள் மற்றும் காணிக்கை பெட்டிகளில் மர்ம நபர் ஒருவர் குப்பைகளில் இருந்து சேகரித்த ஆணுறைகளை போட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன.
இதனையடுத்து இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மங்களூர் கோராஜானா பகுதியில் உள்ள கோயிலில் உள்ள உண்டியலில் மர்ம நபர் ஒருவர் எதையோ போடுவது தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக காவல்துறையினர் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில், அந்த மர்ம நபர் பிடிபட்டார். விசாரணையில் அந்த நபர் 62 வயது நிரம்பிய தேவ்தாஸ் தேசாய் என்பது தெரியவந்தது. ஆந்திர பிரதேச மாநிலம் ஹுப்பாலியை சேர்ந்த இவர் மங்களூரில் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகிறார்.இவரது தந்தை காலத்தில், இவரது குடும்பத்தினர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளனர்.
தேவ்தாஸின் மனைவி மற்றும் குழந்தைகள் சில வருடங்களுக்கு முன்னதாகவே இவரை விட்டுச் சென்றுள்ளனர். முன்னதாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த தேவ்தாஸ், வயது முதுமையால பிளாஸ்டிக்குகளை பொரிக்கி அதை விற்பனையாளர்களிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவர் மீது 5 கோயில்களில் இருந்து புகார் வந்த நிலையில் விசாரணையில் அவர் 18 இடங்களில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, “ நான் கடந்த 15 வருடங்களாக கிறிஸ்துவின் செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறேன். பைபிளில் கர்த்தரை தவிர வேறு கடவுள் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. தூய்மையற்ற இடங்களுக்கு இது போன்ற தூய்மையற்ற பரிசுகள் கொடுக்கப்பட வேண்டும். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனக்கு கடவுள் 70 வயது வரை வாழ்வதற்கான ஆயுளை கொடுத்துள்ளார்.ஆனால் தற்போதே எனக்கும் 62 வயதாகி விட்டது” என்று கூறியுள்ளார்.
தகவல் உதவி : https://www.opindia.com/2021/12/man-who-has-been-dropping-used-condoms-in-temple-hundis-arrested/