Delhi Crime: கணவனுக்கு 15 முறை கத்திக்குத்து.. மனைவிக்கு இரும்பு ராடால் அடி.. வீடு புகுந்த கும்பல் வெறிச்செயல்..!
டெல்லியில் வீடு புகுந்த கும்பல் கணவனை கத்தியால் குத்தியதுடன் மனைவியை இரும்பு ராடால் தாக்கி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. டெல்லியில் அமைந்துள்ளது ஆலிவிஹார் பகுதி. இங்கு வசித்து வருபவர் அரவிந்த் மண்டல். அவரது மனைவி ராகா மண்டல்.
15 முறை கத்திக்குத்து:
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.40 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. அந்த கும்பல் திடீரென அரவிந்தையும், ராகாவையும் சரமாரியாக தாக்கியது. தாக்கியது மட்டுமின்றி அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியது. அரவிந்தை அவர்கள் 15 முறை கத்தியால் குத்தினர்.
தனது கணவர் கத்திக்குத்து வாங்குவதை அவரது மனைவி தடுக்க முயனறார். ஆனால், அந்த கும்பல் அவரை இரும்பு ராடால் நெத்தியிலே கடுமையாக தாக்கியது. இவர்களை கடுமையாக தாக்கிய அந்த கும்பல் பின்னர் தப்பிச்சென்றது. இந்த சம்பவத்தின்போது கேட்ட கடுமையான அலறல் சத்தத்தைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
வாக்குவாதம்:
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தியில் கிடந்த அரவிந்த் மண்டலையும், ராகா மண்டலையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரவிந்த் மண்டல் தனது மகனை கடந்த வௌ்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பள்ளியில் இருந்து திரும்ப அழைத்து வந்துள்ளார்.
அப்போது, மனோஜ் ஹல்தார் என்பவருக்கும் அரவிந்த் மண்டல் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின்போது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
வீடு புகுந்து தாக்குதல்:
இந்த சம்பவத்திற்கு பிறகே ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் சென்று அரவிந்தையும், அவரது மனைவியும் வீடு புகுந்து தாக்கியுள்ளனர். அரவிந்த் அவரது மகனை அழைத்து வந்தபோது அந்த கும்பல் அவரது மகனை கேலி செய்ததாகவும், அதன் காரணமாகவே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அந்த வாக்குவாதத்தின்போது மீண்டும் வருவதாகவும் அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், போலீசார் அரவிந்த் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நபரையும் பிடித்தனர். ராஜூ பத்ரா (26), ரவி என்ற கொள்ளு (19), ஷம்பு (26) மற்றும் 17 வயது சிறுவனை பிடித்துள்ளனர். அவர்களில் சிறுவனை தவிர மற்ற மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். சிறுவன் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைநகரில் வீட்டின் உள்ளே புகுந்து கணவன் மனைவியை தாக்கி கணவனை 15 முறை கத்தியால் குத்திய கும்பலால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், தப்பியோடிய விஜய் பத்ரா மற்றும் மனோஜ் ஹல்தாரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Crime: நெல்லையில் பயங்கரம்: ஆட்டோவை வழிமறித்து ஓட்டுநர் படுகொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...
மேலும் படிக்க: Crime: சென்னை புறநகரில் மற்றொரு என்கவுண்டர்..! போலீஸ் தோட்டாவிற்கு ரவுடி குள்ள விஷ்வா பலி..!