மேலும் அறிய

Crime: நெல்லையில் பயங்கரம்: ஆட்டோவை வழிமறித்து ஓட்டுநர் படுகொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...

அக்கம் பக்கத்தினர் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து சென்று  விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாதுரை 65.. இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.. இந்த நிலையில்  நேற்று விஜயகுமார் சவாரிக்காக நெல்லைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேலச்செவல் அருகே வெள்ள நீர் கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மர்ம  கும்பல் விஜயகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.. இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிர் இழந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விரைந்து சென்று  விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகலறிந்த விஜயகுமாரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து விஜயகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..  மேலும் கொலை நடந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.. இருப்பினும் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது..  தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் கொலைக்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. கடந்த ஓரிரு மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பாஜக பிரமுகர் கொலை உள்பட இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள்  நடந்துள்ளது..  இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.. கொலை சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!
தந்தை என்ற உறவுக்கே களங்கம்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிரடி கைது!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget