மேலும் அறிய

வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்

தற்போது இளைஞர்களிடையே  குறிப்பாக கூற வேண்டும் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சிகரெட்டே , மது பழக்கங்களை தண்டி தற்பொழுது கஞ்சா போதைக்கு அதிகமாக அடிமையாகி வருகின்றனர் .இதனை கட்டுப்படுத்த போலீசார் பல முயற்சிகளை எடுத்துவரும் வேலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்குளுடன் , தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காவல்துறையினர்,  ஆற்காடு மற்றும் மேல்விஷாரம் சுற்றுவட்டாரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . அப்போது விஷாரம் கத்தியவாடி கூட்ரோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் ஒருவர் ,  அவ்வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு நபரின் மீது இருசக்கர வாகனகத்தை மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் ஆற்காடு நோக்கி அதிவேகமாக சென்றுள்ளார்.

வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

 இதனை கண்ட பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலை தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர்  ஆற்காடு நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சாத்தூர் பகுதியை சேர்ந்த புவனேஷ் குமார் (29)என்பதும் இவர் கஞ்சா போதையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து புவனேஷ் குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். மேலும்  காவல்துறையினர் புவனேஷ் குமாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் புவனேஷ் குமார் ஆற்காடு ,விஷாரம் கத்தியவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

 குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் பேரில்  இருசக்கர வாகனத்தில்  விற்பனைக்காக கொண்டு சென்ற கஞ்சா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  மேலும்  கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும்  பறிமுதல் செய்ததுடன் புவனேஷ் குமாரை(29) கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

வாண்டடா வந்து சிக்கிய ‛ஹோல் சேல்’ கஞ்சா வியாபாரி

ஏஜெண்டுகளை அமைத்து ஆற்காடு நகரம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்து பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இதுபோன்ற கஞ்சா வியாபாரிகளை மாவட்டம் முழுவதும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா அவர்களுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற கஞ்சா பொட்டலங்கள் அதிக அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வர படுவதாகவும் , இதனை தடுக்க மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொது மக்களிடையே எழுந்துள்ளது.

Also Read : தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget