மேலும் அறிய

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

"மேல்நிலை பள்ளிக்கு இங்கு இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூதூருக்குத்தான் போகணும் . 9-ஆம் வகுப்பு சேரும் போது ஹாஸ்டெல்ல இடம் கிடைக்கல , அப்போ அந்த ஒரு வருஷம் முழுவதும் , 30 கிலோமீட்டர் காட்டு பாதையில நடந்து போய்தான் படிச்சேன் . அந்த சமயத்தில்தான் நல்ல படிக்கணும்னு ஒரு வைராக்கியம் வந்துச்சு . நான் நல்ல மதிப்பெண் எடுத்ததால் 10-ஆம் வகுப்பில் அரசு விடுதியில் இடம் கொடுத்துட்டாங்க" .என்று தெரிவித்தார் 

"எங்க மலைவாழ் மக்களுக்கு எந்த நோய்நொடியும் வரக்கூடாது, அதுக்குத்தாங்க நான் டாக்டராவே ஆனேன்"  என்று மலைவாழ் மக்களுக்கே சொந்தமான இயல்பான வட்டார மொழியில் தனது பேச்சை தொடங்கிய வெங்கட் ராமன் (31) தான் , திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களில் முதல் எம்பிபிஎஸ் டாக்டர். ”வெங்கட்ராமன் சார் வெறும் டாக்டர் மட்டும் இல்ல எங்களுக்கு சாமி மாதிரின்னு” மலை கிராமம் முழுவதும் இவருடைய புகழ்தான் .

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

யார் இந்த வெங்கட்ராமன் ? 

திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து சரியாக  40  கிமீ தூரத்தில் எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் மலைதிருப்பத்தூர் கிராமம் தான் வெங்கட்ராமனுக்கு பூர்விகம். பழங்குடி வகுப்பை சேர்ந்த வெங்கட்ராமனின் பெற்றோர் வேதி-மாரி சாதாரண விவசாய கூலிகள். இவர்களுக்கு வெங்கட்ராமன் உற்பட 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த மலை திருப்பத்தூரிலேயே, ஏன் இன்னும் கூற வேண்டுமானால் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஜவ்வாது மலை பகுதியிலுள்ள 32 பழங்குடி இனத்தவர் வசிக்கும் கிராமங்களில் வெங்கட்ராமன் தான் முதல் டாக்டர் .

பல தலைமுறைகளாக மருத்துவமனை , மருத்துவர்கள் என எதையும் அறியாத 32 கிராம மலைவாழ் மக்களுக்காக , முதல் முறையாக பூதூர் நாட்டில் மாவட்ட நிர்வாகம்  சார்பில் 15  ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தரப்பட்டது . பல தலைமுறைகளாக சாலை , வசதி , போக்குவரத்து வசதி , தொடர் மின்சார துண்டிப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகளால் , பூதூர் நாட்டில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் யாரும் வராமலேயே இருந்துள்ளனர் .

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

சாதாரண தலைவலி முதல் பாம்பு கடி , பிரசவம் வரை எல்லாத்துக்குமே நாட்டுவைத்திய முறை வைத்தியத்தைத்தான் பின்பற்றி வந்துள்ளனர். இதனை கண்டு மிகவும் வேதனை அடைந்த வெங்கட்ராமன் , தான் 10-ஆம் வகுப்பு படிக்கும்போதே மருத்துவர் ஆகி , தனது மலைவாழ் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும் என்ற இலட்சியத்தை வளர்த்துக்கொண்டார். இது தொடர்பாக வெங்கட்ராமனின் , பள்ளித்தோழர் கோவிந்தராஜன் கூறுகையில் , "ஒன்றாம் வகுப்பில் இருந்து நானும் வெங்கட்டும் ஒண்ணாதான் படிச்சோம், படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ஆடு மாடு மேய்ப்பதில் தான் எங்களுக்கு அதிக நாட்டம், ஏன்னா அப்போதான் மலை பகுதியில போய் மாட்டை மேச்சலுக்கு விட்டுட்டு நாங்க விளையாட முடியும் .

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

ஒன்னாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை எங்க கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில்தான் படிச்சோம், ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை நெல்லிவாசல் நாட்டில் உள்ள வனத்துறை நடுநிலைப்பள்ளி, பிறகு 9 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை புதூர் நாடு வனத்துறை பள்ளியில்தான் படிச்சோம். எட்டாம் வகுப்பு வரை கொஞ்சம் விளாயாட்டு தனமாகவே இருந்த வெங்கட், 9-ஆம் வகுப்பு முதல் படிப்பில் அதிக ஆர்வம் காமிக்க ஆரம்பிச்சார் . தூக்கம் கூட கைல புத்தகத்தை வச்சிக்கிட்டு அமர்ந்த மாதிரி தான் தூங்குவாரு. அவருடைய கடின முயற்சியால் அரசு மருத்துவர் ஆகி எங்க பகுதியிலே மருத்துவம் பாக்குறாரு. அவர் வந்ததுக்கு பிறகு எங்கள் மலைவாழ் மக்களுக்கு , நோய்கள் மீதான அச்சம் முற்றிலும் நீங்கி இருக்கு” என்று கூறினார் .

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

அவரை தொடர்ந்து நம்மிடம் பேசிய மருத்துவர் வெங்கட்ராமன், "எங்க மலை திருப்பத்தூர் கிராமத்தில் ஆரம்பப்பள்ளி வரைதான் உள்ளது , நடுநிலைப்பள்ளி போகணும்னா இங்க இருந்து 8 கிலோமீட்டர்ல இருக்க நெல்லிவாசல் பஞ்சாயத்துக்கு தான் போகணும். "மேல்நிலை பள்ளிக்கு இங்கு இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூதூர் நாட்டுக்கு தான் போகணும் . 9-ஆம் வகுப்பு சேரும் போது ஹாஸ்டெல்ல இடம் கிடைக்கல , அப்போ அந்த ஒரு வருஷம் முழுவதும் , 30 கிலோமீட்டர் காட்டு பாதையில நடந்து போய்தான் படிச்சேன். அந்த சமயத்தில் தான் நல்ல படிக்கணும்னு ஒரு வைராக்கியம் வந்துச்சு . நான் நல்ல மதிப்பெண் எடுத்ததால் 10 ஆம் வகுப்பில் அரசு விடுதியில் இடம் கொடுத்துட்டாங்க" .என்று தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில் "வீட்டின் வறுமை காரணமாக 9-ஆம்  வகுப்பு தொடங்கி விடுமுறைகளில் கட்டிட வேலைக்காக சென்னைக்குப் போக ஆரம்பித்தேன் , நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது என் 2 அண்ணன் மற்றும் என்னோடு ஒரு வயது  இளையவர் ஆன எனது தங்கை உற்பட மூன்று பேருக்கும்  திருமணம் செஞ்சிக்கிட்டாங்க. இந்த கால கட்டத்தில் தான் விவசாய வேலைகள் சற்று தொய்வு அடைந்து, மலை கிராமங்களில் கடும் வறுமை நிலவிவந்தது. அதுக்காக வேறு வழின்றி காலாண்டு , அரை ஆண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறைகளில்  எல்லாம் கட்டிட வேலைக்குப் போவேன் . அதில் கிடைக்கும் சம்பளத்தை வச்சு , ஒரு பகுதியை வீட்டு செலவுக்கு குடுத்துட்டு மீதியை என் படிப்பு செலவுக்கு வைத்துக்கொள்வேன்” என்றார்

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

எனது கடின உழைப்பின்  பயனாய் 12-ஆம் வகுப்பில் 1200-க்கு, 1000 மதிப்பெண்கள் எடுத்து எங்க புதூர்நாடு வனத்துறை மேல்நிலை பள்ளியில்  முதல் மதிப்பெண் பெற்றேன். முதல் மதிப்பெண் எடுத்த போதிலும், குடும்ப வறுமை காரணமாக எனது சிறுவயது கனவான மருத்துவ படிப்பை கைவிட்டு அரசு கலை கல்லூரியில் சேர்ந்தேன் . எனது  குடும்ப வறுமையை பற்றி கேள்விப்பட்ட அப்போதைய வேலூர் மாவட்ட வனத்துறை அலுவுலர் , மஞ்சுநாதா, அவரது வங்கி கணக்கு மூலம் ஒரு லட்சம் ருபாய் லோன் எடுத்து கொடுத்தார் . அதை நான் திருப்பி தரதேவையில்லை என்றும் தெரிவித்தார் . அவர் இல்லை என்றல் இன்று நான் இன்று வரை ஆடு மாடுதான் மேய்த்து கொண்டு இருந்திருப்பேன். அவருடைய உதவியாலும், நான் வேலைக்கு போய் சேர்த்து வைத்து இருந்த தொகை மூலமும் 2008-ஆம் ஆண்டில் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில்  மருத்துவ படிப்பில் சேர்ந்தேன் .தமிழ் வழி கல்வியில் பயின்ற எனக்கு அங்கு சொல்லித் தரப்படும் ஆங்கில வழி பாடமுறை சிறிது சிரமமாக இருந்தது . 

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

பிறகு விடாமுயற்சியால் மருத்துவ படிப்பை முடித்தேன் . சிறு வயது முதலே எங்கள் மலை கிராம பகுதியில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மருத்துவ படிப்பை முடித்த நான் , எங்கு தவறான மருத்துவத்தால் எங்களது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, 2017 ஆம் ஆண்டு வரை திருச்சியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் , பயிற்சி மருத்துவராக பணியாற்றினேன். பிறகு மெடிக்கல் சேர்விசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு தேர்வு எழுதி , திருப்பத்தூர் அடுத்துள்ள அண்டியப்பனுர் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், அரசு மருத்துவராக பணியில் சேர்ந்தேன்.

 2020 ஆம் ஆண்டு  கொரோனா வைரஸ் தீவிர பரவல் காலத்தில் இருந்து திருப்பத்தூர் நகராட்சியில் இயங்கி வந்த கோவிட் கேர் சென்டரில் பணிசெய்து வந்தேன் கடந்த மாதம் புதூர் நாடு பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப  சுகாதார நிலையத்தில் , மலை வாழ் மக்களுக்காக கோவிட் கேர் சென்டர் ஆரம்பிக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து , என்னை அந்த புதிய சென்டரில் பனி நியமனம் செய்து எனது மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை தருமாறு எங்களுது மருத்துவ துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன் .

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

எனது கோரிக்கையை பரிந்துரை செய்வதற்குள் கடந்த மாதம் எனக்கு கொரோனா நோய் தொற்று  உறுதி செய்யப்பட்டு 15 நாட்கள் திருப்பத்தூரில் உள்ள கோவிட் சென்டரில் சிகிச்சை பெற்று வந்தேன் . பிறகு ஓய்வு எடுப்பதற்காக எனது சொந்த ஊரான மலைதிருப்பத்தூர் வந்தபொழுது , கிராமத்தில் பலருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்து வந்தது. கொரோனா நோய் பற்றி எந்த புரிதலும் இல்லாத எங்களது கிராம மக்கள் , கிராமங்களை தேடி வரும் போலி மருத்துவர்களிடம் ஊசிபோட்டு, மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தனர். எங்களது கிராமங்களில் மட்டும் இல்லை. 32 மலைக்கிராமங்களிலும் இதே நிலை தான் இருந்தது. பிறகு எனது மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிராமம் கிராமமாக , மெடிக்கல் கேம்ப் நடத்தி, கோவிட் பரிசோதனைகள்  செய்தோம். இதுவரை 15 கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு  200 மாதிரிகள்  மலைவாழ் மக்களிடம் எடுக்கப்பட்டுள்ளது .

தானாய் வளர்ந்த ஒரு காட்டுச் செடி : திருப்பத்தூர் மலை கிராமங்கள் போற்றும் மருத்துவர் வெங்கட்ராமன் யார் ?

200-இல் , 82 கிராம மக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது . அதிர்ஷ்டவசமாக இது வரை ஒரு மரணம் கூட நேரவில்லை என்று சந்தோசத்துடன் தெரிவித்த மருத்துவர் வெங்கட் ராமன். மலை வாழ் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்த மருத்துவ அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், தனக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால், தன்னை  மலை கிராமங்களுக்கு தான் மாற்றம்செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தனது கனிவான கோரிக்கையை வைத்தார். மேலும் மலை கிராமங்களில் அதிகரித்து வரும் போலி மருத்துவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget