Crime: மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த நபர் போக்சோவில் கைது
மயிலாடுதுறை அருகே கண்பார்வை இல்லாத மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்த நபரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருவிழந்தூர் கழுக்காணிமுட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேலு என்பவரின் மகன் 35 வயதான சேது என்கிற ரமேஷ். இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த கண்பார்வை இல்லாத மனவளர்ச்சி குன்றிய 16 வயது சிறுமியை ரமேஷ் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதற்குள் ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ரமேஷ் நாகப்பட்டினம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Anbumani Womens Day Wish : மகளிர் சாதனைகள் படைக்க உதவுவோம் என உறுதியேற்போம்- அன்புமணி
குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் பெரும்பாலான குழந்தைகள் நன்கு அறிமுகம் ஆன நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். நன்கு அறிமுக ஆனவர்கள் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், துன்புறுத்தல்களும் செய்து வருகின்றனர்.
ADMK Complaint On CM Stalin : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!
உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை கொடுப்பதில் தற்போது விதிவிலக்காக யாரும் இல்லை. இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்