மேலும் அறிய
Advertisement
மதுரையில் வாலிபரை வீட்டு வாசலில் வைத்து கொடூரமாக வெட்டிய விவகாரம் - 6 சிறுவர்கள் கைது
மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆறு சிறார்கள், வாலிபரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யா இவருடைய மகன் பிரகாஷ் 21 வயது, இவர் பழங்காநத்தம் பகுதியில் இருக்கக்கூடிய ஆட்டோ ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் அதேபகுதியை சேர்ந்த சிறார்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் சிறார்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பிரகாசை அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 சிறார்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். மேலும் அவரை தடுக்க வந்த பிரகாஷின் சித்தி வாசுகி அம்மாளையும் காலில் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரகாசை மீட்ட உறவினர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயர்ந்தார். மேலும் அவருடைய சித்தி வாசுகிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷின் தந்தையார் வீரய்யா அளித்த புகார் தொடர்ந்து எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 6 சிறார்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆறு சிறார்கள் வாலிபரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல் மதுரை மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த அலிசேட் என்ற 62 வயது முதியவர் போக்சோ வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறைச்சாலை அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் முதியவர் அலிசேட்டுக்கு கடந்த 19ஆம் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்த அலிசேட் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion