மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
கைக்குழந்தையுடன் வந்த ஆசிரியை; கடைசி நேரத்தில் நின்ற திருமணம் - சினிமாவை போல் மதுரையில் நடந்த சம்பவம்
வாங்கிய மாலை கழுத்தில் அணிவதற்குள் காவல்நிலையம் வந்த புதுமாப்பிள்ளை - கவலையின் உச்சத்தில் கண்ணீர்விட்டு அழுத பெண் வீட்டார்.

திருமணம் - மாதிரிப்படம்
எப்டியாவது என்னை காப்பாத்து உதயா, என் வாழ்க்கைய காப்பாத்து உதயா என போனில் பதறி கெஞ்சிய புது மாப்பிள்ளை.
திருமண நிகழ்வில் அதிர்ச்சி
மதுரை மகாலெட்சுமி பகுதியை சேர்ந்த ஐடி நிறுத்தில் பணிபுரியும் பொறியாளரான பாலசந்தர் (32) என்பவருக்கு தேனியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திருமண பத்திரிக்கை அடித்து இருவீட்டாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு திருமணம் நடைபெறவதற்கான தடல்புடல் ஏற்பாடுகள் மண்டபத்தில் நடைபெற்று வந்தன. திடீரென மதுரை சூர்யாநகர் பகுதியை சேர்ந்த உதயா என்ற தனியார் பள்ளி பெண் ஆசிரியை கைக்குழந்தையுடன் அழுதபடி மண்டபத்திற்கு நேரடியாக வந்து திருமண மாப்பிள்ளை பாலச்சந்திரன் தன்னை காதலிப்பதாக கூறி தாலி கட்டி தன்னுடன் வாழ்ந்து தனக்கு குழந்தை பிறந்து சில நாட்களே ஆகிறது இது தான் அந்த குழந்தை என கூறியுள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டாரிடம் ஆசிரியை உதயா மாப்பிள்ளை பாலச்சந்திரன் மீது கூறிய குற்றச்சாட்டை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண் வீட்டாரிடம் பேசிய பட்டதாரி பெண் உதயா தான் ஏற்கனவே திருமணமாகி தனது குழந்தையுடன் வசித்துவந்து ஆசிரியராக பணிபுரிந்ததாகவும், அப்போது 2021 ஆம் ஆண்டு ஜிம்மிற்கு வந்தபோது பாலசந்திரனுடன் பழகி காதலித்ததாகவும் அப்போது எனது கணவருடன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் தன்னிடம் இல்லறத்தில் இருந்துவிட்டதாகவும், அப்போது திருமணம் செய்துகொள்ளுங்கள் என்றபோது விவகாரத்து வழக்கு முடிந்தவுடன் திருமணம் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.
கண்ணீர்விட்ட பெண்
பின்னர் விவகாரத்து வழக்கு முடிவடைந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியபோது வீட்டில் வைத்தே தாலியை கட்டியதாகவும், திருமணம் செய்ய தன் பெற்றோர் 25 பவுன் நகை கேட்பார்கள் அதனை தருகிறேன் அப்போது வீட்டில் சொல்லிக்கிறேன் என கூறினார் எனவும், அப்போது 2 மாத கர்ப்பமான நிலையில் தன்னுடைய கர்ப்பத்தை கலைக்குமாறு பாலச்சந்திரன் கூறியதாகவும் இதனை மறுத்து தான் கடந்த 7 ஆம் தேதி புதூர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் குழந்தை பெற்றபோது தன்னுடைய குழந்தை என கூறி பாலச்சந்திரன் கையெழுத்து போட்டு குழந்தையை வாங்கிக் கொண்டு சென்றதாகவும் தற்போது தனது வீட்டுக்கு குழந்தை பெற்ற சம்பவம் தெரிந்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் சொல்ல முடியாத வேதனைக்கு உள்ளாகி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது மாப்பிள்ளை பாலச்சந்திரன் மீது குற்றம்சாட்டிய உதயாவை அழைத்து வந்த வழக்கறிஞர்களை பார்த்து பெண் வீட்டார்கள் நீங்கள் எங்கள் குலதெய்வம் தான் உங்களை அனுப்பி வைத்து என் மகளை காப்பாற்றி இருக்கிறது.
கண்ணீர் மல்க நன்றி
திருமணம் செய்து வைத்திருந்தால் என் மகளும் இந்த பெண் போல குழந்தையோடு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கும் மிக்க நன்றி என கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததோடு, ஆக்கி வைத்த உணவை கூட உண்ணாமல் அப்படியே மண்டபத்திலிருந்து அவசர அவசரமாக கண்ணீருடன் வெளியேறி ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து காவல்துறை உதவி எண்ணுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாலச்சந்திரனை காவல்துறையினர் அழைத்துசென்று மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது உதயாவோடு வாழ்வதற்கு பாலச்சந்திரன் சம்மதம் தெரிவித்ததாக உதயா தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார். திருமண மண்டபத்திற்கு வருகை தந்த உறவினர்களிடம் உடல் நலக்குறைவால் திடீரென திருமணம் நின்று விட்டதாக கூறி மண்டபம் தரப்பினர் சொல்லி அனுப்பி வைத்த அதனைக் கேட்ட திருமணத்திற்கு வந்தவர்கள் செய்வதறியாது சோகத்துடன் சென்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















