மேலும் அறிய
மதுரை போலீஸ் கமிஷனர் பெயரில் மீண்டும், மீண்டும் போலி பேஸ்புக் கணக்கு ; ஆன்லைன் மோசடிக்கு வலை
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் மீண்டும், மீண்டும் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு, ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் வடமாநிலத்தவர்.

சைபர் கிரைம்
பிப்ரவரியில் ஆசிஷ்குமார், ஜூலையில் சந்தோஷ்குமார் ஒரே போலி ஐடி, CRPF அதிகாரி என மாநகர காவல் ஆணையர் பெயரில் போலி அக்கவுண்ட் மூலம் தொடரும் மோசடி.
போலீஸ் கமிஷனர் பெயரில் போலி கணக்கு
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வல் ஒருவரின் பேஸ்புக் அக்கவுண்டில் நேற்று காலை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் ‘Friend Request’ வந்தது. அதை அந்நபர் ACCEPT பண்ணியதும் சில நிமிடங்களில் பேஸ்புக் MESSANGER லிருந்து ‘ஹாய்’ என்றுக்கூறி மெசேஞ்சரிலேயே நலம் விசாரித்தார். பின்னர் அவரின் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். அதற்கு சமூக ஆர்வலரும் எதற்கு எனது எண் கேட்கிறீர்கள் சார் என கேட்க, அதற்கு பதில் அளித்த அந்த நபர் ”தனது நண்பரான சந்தோஷ்குமார் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் எனவும், அவர் வெளியூருக்கு பணியிட மாறிச்செல்வதால் தன் வீட்டு பர்னிச்சர் பொருட்களை விற்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது பொருட்கள் அனைத்து புதியவை நல்ல நிலையில் உள்ளது. விலை மிகவும் மலிவானது. அதனை நீங்கள் விரும்பினால் வாங்கி கொள்ளலாம் என கூறியுள்ளார்”. சமூக ஆர்வலர் பதில் அளிக்காத நிலையிலும் தொடர்ந்து மெசேஜ் வந்த வண்ணம் இருந்துள்ளது.
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
இதனை பார்த்து அலர்ட் ஆன அந்த நபர் மாநகர்காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் யாரோ போலியான நபர்கள் பேசுவதாக தெரிந்துகொண்டு அக்கவுண்டை UNFRIEND செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இதேபோன்று மாநகர்காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் போலியான அக்கவுண்ட் தொடங்கி, இதே போன்று ஆசிஷ்குமார் என்ற CRPF அதிகாரி என்ற பெயரில் மோசடியாக பேசியது தொடர்பாக ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 5 மாதங்களில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் CRPF அதிகாரியின் பெயரை மாற்றி மீண்டும் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் மோசடியை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் உரிய நிரந்தர நடவடிக்கை எடுத்து இது போன்ற மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற்றம் அடைந்துவிடாமல் இருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sonu Sood : உணவில் எச்சில் துப்பியதை நியாயப் படுத்திய நடிகர் சோனு சூட்... இணையத்தில் வலுக்கு கண்டனங்கள்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN DSP Transfer: தொடரும் தமிழக அரசின் அதிரடி - முக்கிய நகரங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்களை மாற்றி உத்தரவு
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement