மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
மனைவியுடன் பிரச்னை; வரதட்சனை நகையை கொடுத்த கணவன் - கமுக்கமாக அடகு வைத்த பெண் இன்ஸ்பெக்டர்
கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் நகைகளை அடகு வைத்த காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம்.
மதுரையில் வியாபாரி ஒருவரிடம் கடந்த சில வருடத்திற்கு முன் 10 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த பெண் காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது திருமங்கலம் பகுதியில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் 95 பவுன் நகைகளை அடகு வைத்த காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் - மனைவி கருத்துவேறுபாடு
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிநயா 30 சென்னையில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இருவருக்குமான மோதல் அதிகரிக்கவே இரண்டு மாதத்திற்கு முன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது.
புகாரின் பெயரில் விசாரணை
விசாரணையின்போது கணவருடன் இனி சேர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை. எனவே திருமணத்தின்போது தனது பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா தரப்பு ஆய்வாளரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜேஷிடம் அபிநயாவின் நகைகளை கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆய்வாளர் கீதா கூறியதை தொடர்ந்து, 95 பவுன் நகைகளை ராஜேஷ், ஆய்வாளர் கீதாவிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒப்படைத்துள்ளார். ஆனால் அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல் ஆய்வாளர் கீதா காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
நகையை ஏமாற்ற நினைத்த பெண் காவல் ஆய்வாளர்
இந்நிலையில், அபிநயாவின் குடும்பத்தினர் நகைகளை தராமல் ஏமாற்றுவதாக ராஜேஷ் குடும்பத்தினருடன் தகராறு செய்ததாக தெரிய வருகிறது. அதற்கு ராஜேஷ் தன்னிடம் நகை இல்லை எனவும் ஒரு மாதத்திற்கு முன்பு காவல் நிலையத்தில் ஆய்வாளர் கீதாவிடம் ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். பெண் வீட்டார் தகராறு செய்ததால் ஆத்திரமுற்ற ராஜேஷ் ஆய்வாளர் கீதாவிடம் நகைகளை பெண் வீட்டாரிடம் கொடுக்கும்படி கூறியதாகவும் அதற்கு ஆய்வாளர் கீதா நகைகளை கொடுக்க முடியாது யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து புகார் தொடர்பாக டிஎஸ்பி அலுவலகம் ஆய்வாளரிடம் நடத்திய விசாரணையில் அனைத்து நகைகளையும் காவல் ஆய்வாளர் கீதா தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து நடத்திய பேச்சு வார்த்தையில் நகையை திருப்பி தருவதற்கு ஆய்வாளர் கீதா கால அவகாசம் கேட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில் 20 பவுன் நகைகளை மட்டும் கீதா திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி 75 பவுன் நகைகளை தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் சம்பவம் தொடர்பாக நேரடியாக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திய மதுரை சரக டி.ஐ.ஜி., ரம்யபாரதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நகைகளை மீட்டுத்தர காவல் நிலையத்தை நாடிய பெண்ணின் நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டிய பெண் காவல் ஆய்வாளரே தன்னிடம் ஒப்படைத்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற சம்பவம் திருமங்கலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் ஆய்வாளர் கீதாவின் கணவர் சரவணன் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion