மேலும் அறிய

மதுரையில் அடுத்தடுத்து இளைஞர்கள் கொலை.. கோயில் முன்பாக நடந்த பயங்கர சம்பவம்

மதுரையில் கோயில் முன்பாக இளைஞர் வெட்டிப் படுகொலை - மது போதையில் கொலை சம்பவம் நடைபெற்றதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள கோயில் முன்பாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இளைஞருக்கு ஆயுதங்களால் சரமாரியாக வெட்டு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள திடீர் நகர் பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவரது மகனான ராமசுப்பிரமணி (32) மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பயணிகளை பேருந்துகளில் அனுப்பி வைக்கும் டிக்கெட் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீர்நகர் சந்தன மாரியம்மன் கோயில் முன்பாக நின்று கொண்டிருந்த போது திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று ராமசுப்ரமணி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ராமகிருஷ்ணனுக்கு தலை, நெற்றி கை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் அருகில் இருந்த அவரது உறவினர் மூலம் ஆம்புலன்ஸில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 
 
அங்கு ராமகிருஷ்ணனின் உடல் நிலையை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலயே ராமசுப்ரமணி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக திடீர்நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் இருந்த கும்பல் ஆள் மாற்றி கொலை செய்தார்களா ? என்பது குறித்தும் வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள கோயில் முன்பாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரி மாணவன் கொலை

அதே போல் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இந்நிலையில், புதுசுக்காம்பட்டியில் இருந்து அழகர்கோயில் சாலையில் சூரக்குண்டு பிரிவு பகுதியில்,  பூட்டிய கடை வளாகத்தின் முன்பு சிலருடன் நின்றுக் கொண்டிருந்த போது, கிஷோர் என்பவருடன் பேசுவதற்காக, காரை அருகில் நிறுத்தி விட்டு பாண்டிகுமரன் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த கிஷோர் தான் மறைத்து வைத்திருந்த "வால்" போன்ற ஆயுதத்தால் பாண்டிகுமரனை பின்தலை, கழுத்து, கை, மற்றும் நெஞ்சு பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில்படுகாயமடைந்த பாண்டிக்குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கிஷோர் மற்றும் அவர் உடன் இருந்த மற்றவர்கள் தப்பி சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற சம்பவம் போல் மீண்டும் இளைஞர் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Coolie Movie Update: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
Embed widget