மேலும் அறிய

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு, அடுத்த கட்டம் என்ன? முழு விவரம் !

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானித்துள்ளதாக நீதிபதி  கூறியுள்ளார்.

9 பேரின் மனநிலை மற்றும் சொத்து விவரங்கள் ஊதியங்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்து 30 ஆம் தேதிக்கு தீர்ப்பு விவரங்களுக்காக ஒத்திவைப்பு.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் 
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கு
 
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கில் 100க்கும் மேற்பட்ட  சாட்சிய விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 9பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் மதுரை மாவட்டம் முதலாவது குழுக்கள் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி முத்துக்குமரன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக  தீர்ப்பு வாசித்த போது...” கோவில்பட்டி கிளை சிறையில் இருவரும் அடைக்கப்பட்ட போது அவர்களது உடல்களில் காயங்கள் இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. கம்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர். தந்தை-  மகன் இருவருக்கும் போலீஸ்காரர்கள் தாக்கியதால் தான் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது மரணங்களை விளைவிக்க கூடிய வகையில் காயங்கள் இருந்தது. அதனால் தந்தை மகன் ஆகிய இருவரையும் உயிரிழப்பு கொலை என சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையை பதிவு செய்துள்ளது நீதிபதி அவர்களது உடலில் உள்ள காயங்கள் வெளிப்படையாக இருந்ததால் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ செய்யப்பட்டுள்ளது. ஆனால் உட்புறம் இருந்த காயம் பலமுறை தாக்கியதால் ஏற்பட்ட காயம் என்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இரவு முழுவதும் பத்து நிமிடம் இடைவெளி விட்டுவிட்டு தொடர்ந்து தாக்கினார்கள் 200 முறைக்கு மேல்  பின்னால் தாக்கினார்கள் என பென்னிக்ஸ் அவரது உறவினரிடம் கூறியதாக குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால்தான் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியஇருவரையும் காவல்துறையினர் தாக்கி உள்ளனர். கைகளை கயிறில் கட்டி தொங்கவிட்டு தாக்கி உள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. டேபிளில் படுக்க வைத்தும் தாக்கியுள்ளனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கும்போது நாம் அடித்து பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர் எனவும் இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என காவல்துறையினர் அவர்களுக்கும் பேசிக் கொண்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் எங்களை அடிக்கச் சொல்லி கூறினார் எங்களை அடிப்பதை யாரும் வருகிறார்கள். என்பதை கண்காணிக்க காவல் நிலையத்தில் வெளியே இருந்து கண்காணித்து வந்தனர். தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் இரவு முழுவதும் சிறிது நேரம் இடைவெளி விட்டுவிட்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை எதிரிகள் தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தனர். நீண்ட நேரமாக தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.
 
குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
 
காவல்துறையினர் நினைத்திருந்தால் அவர்கள் செய்த தப்பை திருத்திருக்கலாம் ஆனால் அவர்கள் தப்பை திருத்திக் கொள்ளவில்லை.., குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர்  அனைவரும் ஒரே பகுதியில் தான் இருந்தார்கள் என்பதை செல்போன் டவர் மூலமாக தெரிய வந்துள்ளது, ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீர்ப்புக்கு முன் உள்ள வாதங்களை நீதிபதி வாசித்தார். உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ்க்கு ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது. காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் அணிந்திருந்த ஆடைகள் வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்தது அந்த ரத்தக்கரை படிந்த ஆடையை  உறவினர்களிடம் கொடுத்து குப்பை தொட்டியில் போட சொல்லி உள்ளார்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அந்த ஆடையை கைப்பற்றி வழக்கு விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. சிசிடிவி கேமராக்களில் உள்ள பதிவுகளை பகலை இரவாகவும் இரவை பகல் போன்று மாற்றி இருக்கிறார்கள். இந்த வழக்கில் அனைத்து தடைகளையும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அளித்துள்ளனர் இந்த வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளையும் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனையும் அவரது விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. குற்றம் சட்டப் பட்டவர்கள் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களை எஸ்.பி அலுவலகம் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்யவும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் 9பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக வரும் 30 ஆம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய் வேண்டும் என வாசித்தார்.
 
தனியாக விசாரிக்கப்படும் வழக்கு
 
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து மதிப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்து அந்தத் தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி வரும் 30ம் தேதி அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு விவரங்கள் வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான  ஆய்வாளர் ஸ்ரீதர், வழக்கு விசாரணையின்போது ஆதார் ஆவணங்களை திருத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தனியாக விசாரிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமார் குறிப்பிட்டார்.

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget