மேலும் அறிய

மடப்புரம் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான சி.பி.ஐ., விசாரணைக்கு அஜித்குமார் சகோதரர் உட்பட 5 பேர் ஆஜர் !

மதுரை ஆத்திகுளம் சி.பி.ஐ., அலுவலகத்தில் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், காவல்துறை விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், கோயில் ஊழியர்கள், அஜித்குமாரின் சகோதரர் உள்ளிட்ட 5 நபர்கள் சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜர்.

அஜிக்குமார் வழக்கில் சி.பி.ஐ., விசாரணை
 
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார். கடந்த 28 ஆம் தேதி திருப்புவனம் காவல் நிலைய நகை திருட்டு வழக்கு விசாரனைக்கு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்ற போது, கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சி.பி.ஐ தற்சமயம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 14 ஆம் தேதி முதல் நாளான சி.பி.ஐ விசாரனையின் போது டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் அறநிலையத்துறை அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, அரசினர் மாணவர் விடுதி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரனையை துவங்கினர்.
 
கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு சம்மன்
 
இரண்டாவது நாள் விசாரணையில் மதுரை பகுதிகளில் ஆவணங்களை பெறும் பணியினை மேற்கொண்டதுடன், தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர்களுக்கு விசாரணைக்கான சம்மனை வழங்கினர். இதில் அஜித்குமார் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையர் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் சக ஊழியர்களான பிரவின்குமார், வினோத்குமார், ஆகியோர் மற்றும் அஜித்குமாரின் சகோதரரான நவீன்குமார் ஆகியோருக்கு மடப்புரம் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு வந்த சி.பி.ஐ அதிகாரி நேரில் அனைவரையும் வரவழைத்து, இன்று மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராகக் கூறி சம்மன் வழங்கியிருந்தனர்.
 
மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் அஜிக்குமார் தொடர்பான விசாரணைக்கு ஆஜர்
 
இந்நிலையில் திருப்புவனத்தில் அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திகேயன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், அஜித்குமாரின் சகோதரர் நவீன் மற்றும் அஜித் குமாருடன் காவலராக பணிபுரிந்த பிரவீன் குமார் வினோத்குமார் ஆகியோர் இன்று மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல கட்டமான விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget