மதுரையில் பிட் காயின் மோசடி; ஏராளமான நபர்கள் பாதிப்பு - ஏமாற்றியது எப்படி..?
மதுரையில் சதுரங்க வேட்டை பாணியில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பல், மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வசிப்பவர் அனுராதா. இவர் வீட்டில் மசாலா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் இவருக்கு ஆன்லைன் மூலம் ஐஸ்வர்யா என்கிற பெண் அறிமுகமாகி உள்ளார். அனுராதாவிடம் ஐஸ்வர்யா தனக்கு சென்னையில் உள்ள பிட்ஸ் ஸ்மார்ட் என்கிற பிட் காயின் முதலீட்டு நிறுவனத்துடன் தொடர்பு உள்ளதாகவும். இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறிய ஆசை வார்த்தையை நம்பி அனுராதா வங்கி கடன்கள் வாங்கியும், வட்டிக்கு பணம் வாங்கியும் 8 லட்ச ரூபாய் முதலீடு செய்து உள்ளார்.
பிட் காயின் மோசடி ; ஏராளமான நபர்கள் பாதிப்பு !
— Arunchinna (@iamarunchinna) June 28, 2022
மதுரையில் சதுரங்க வேட்டை பாணியில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பல், மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. பாதிக்கப்பட்ட பெண் அனுராதா பேட்டி !@CMOTamilnadu @SuVe4Madurai | @SRajaJourno pic.twitter.com/979zHl7v7p
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்