மேலும் அறிய

செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!

அலங்காநல்லூரில் கார் மற்றும் செல்போனுக்காக கால்டாக்ஸி உரிமையாளரை கடத்தி கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு காரை திருடி சென்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் கடந்த வாரம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டியன் என்ற கால்டாக்ஸி ஓட்டுநர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!
 கால் டாக்ஸி டிரைவரை  வண்டி வாடகைக்கு வேண்டும் என அழைத்து சென்ற  ராணுவ வீரரான மார்நாடு என்ற வாலிபர், அலங்காநல்லூர் பகுதிக்கு காரை அழைத்து சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால் கால்டாக்ஸி உரிமையாளர் பாண்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு உடலை வயல்வெளியில் வீசியுள்ளார்.  அங்கிருந்து கார், மற்றும் செல்போன், பணத்தை திருடி சென்றுள்ளார். கார் மற்றும் செல்போனுக்காக இந்த கொலையை ராணுவ வீரர் செய்தது தெரியவந்துள்ளது.

செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!
கார் சென்ற இடத்தை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் ஆய்வு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மார்நாடு, காரை கடத்தி சென்று கண்மாயில்  மறைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராணுவ வீரரான மார்நாடை கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் அவரிமிருந்த கார் மற்றும் 3 செல்போன்களையும் மீட்டு மார்நாடை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கார் மற்றும் செல்போனுக்காக கார் உரிமையாளரை கொலை செய்து காரை திருடி சென்ற ராணுவ வீரரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனுக்கு ஆசைப்பட்டு டாக்சி டிரைவரை கொலை செய்த ராணுவ வீரர்: மதுரை அருகே பயங்கரம்!
இது குறித்து காவல்துறையினர்...,” மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் சீரிய முயற்சியினால் இச் சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா தொட்டியபட்டி சேர்ந்த முனியாண்டி மகன் மார்நாடு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. அவருடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மற்றும் இறந்த நபரின் நான்கு சக்கர வாகனத்தையும் தனிப் படையினர் கைப்பற்றினர். மேற்படி மார்நாடு என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் ராணுவத்திற்கு வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகிறார் என்று விசாரணையில் தெரிய வருகிறது. இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு துரிதமாக எதிரியை கைது செய்த தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ. பாஸ்கரன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.”

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget