மேலும் அறிய

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !

என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. - நிகிதா பேட்டி.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு - நகை காணமல் போனதாக புகாரளித்த புகார்தாரரான நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்: 9ஆம் தேதிக்கு ஆஜராக உத்தரவு.

அஜித்குமார் கொலை வழக்கு
 
சிவகங்கை மாவட்டம்,  திருப்புவனத்தை அடுத்த, மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்ற இளைஞர் கடந்த ஆண்டு ஜூன் 27- ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட்டு தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அஜித்குமார் கொலை சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவு
 
இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புகாரளித்த மதுரை சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4 ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக நேரில் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அசன்முகம்மது நிகிதா விடம் நகை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க ஆட்சேபனை இருக்கா என்றார். அதற்கு நிகிதா ஆட்சேபனை ஏதும் இல்லை என வாய்மொழியாக கூறிய நிலையில் 9ஆம் தேதிக்கு ஆஜராகி எழுத்து மூலமாக கொடுப்பதற்கு உத்தரவிட்டார்.
 
நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்
 
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நிகிதா...,” நான் முழுக்க முழுக்க சட்டத்தை நம்பி நீதிமன்றத்திற்கு வந்துள்ளேன். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. தனிப்பட்ட முறையில் தான் நான் இங்கு வந்துள்ளேன். நான் பணி செய்யும் இடத்தில் கூட நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்ன நடந்தது என்பது கூட தெரியாமல் ஊடகத்தில் என்னை கண்டபடி திட்டுகிறார்கள். நகை திருடு போனதற்கான முகாந்திரம் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இந்த வழக்கிற்கு பின்னதாக என்னுடைய தாயார் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலைத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் அதன் பிறகு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை என சிபிஐ அதிகாரிகள் மூலம் நிரூபணமாகிவிட்டது. எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.
 
ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது
 
மறுநாள் காவல்துறை அதிகாரிகள் என்னை அழைத்த போது நகைகள் கிடைத்துவிட்டதாக நினைத்துதான் நான் அங்கு சென்றேன். அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என்பது அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. நாங்களே அழுதோம். அஜித்குமார் உயிரிழப்பு ஒரு தாய்க்கு ஈடு செய்ய முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பு அதை எங்களாலும் தாங்க முடியவில்லை. ஸ்பெஷல் டீம் அழைத்து சென்று விசாரித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. நான் காவல் நிலையத்தில் இருந்த வரையும் மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையத்தில் தான் இருந்தார்”. எனவும் தெரிவித்தார்.
 

தலைப்பு செய்திகள்

Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
TN Heavy rain warning : வெளுக்கப்போகுது கன மழை.! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு குறி- வானிலை மையம் அலர்ட்
இன்று பொத்துக்கிட்டு ஊத்தப்போகது வானம்.! இன்று எங்கெல்லாம் மழை.? வானிலை மையம் அலர்ட்
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
Jayakumar vs CM Vijay : Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க.! சிஎம் விஜய்க்கு வகுப்பெடுத்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க.! சிஎம் விஜய்க்கு வகுப்பெடுத்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?
Embed widget