மேலும் அறிய

TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை

TNPSC குரூப் 1 அறிவிப்பு ஏமாற்றம்: காலியிடங்களை 100 ஆக உயர்த்த அன்புமணி கோரிக்கை!

இளைஞர்களை குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஏமாற்றி உள்ளதாகவும் காலியிடங்கள் எண்ணிக்கையை குறைந்தது 100 ஆக உயர்த்த வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழக அரசுத் துறைகளுக்கு துணை ஆட்சியர் உள்ளிட்ட குரூப் 1 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் நிலையில், அதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தேர்வர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். சுமார் 2 லட்சம் இளைஞர்கள் எழுதக்கூடிய இந்த தேர்வுகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு வெறும் 26 ஆக குறைக்கப்பட்டிருப்பதுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணமாகும்.

தமிழ்நாட்டில் துணை ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயவிப்பு அலுவலர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பணிகளுக்கான குரூப் 1 தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

நடப்பாண்டிற்காக குரூப் 1 பணிகளுக்கான அறிவிக்கையை தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அரசுத்துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், குறைந்தது 100 பணியிடங்களுக்காவது ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 துணை ஆட்சியர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள், 3 கூட்டுறவு துணை பதிவாளர்கள், இரு வணிகவரி உதவி ஆணையர்கள், ஒரு தொழிலாளர் நல உதவி ஆணையர் என 26 இடங்களுக்கு மட்டுமே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை இது எந்த வகையிலும் திருப்திப்படுத்தாது.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை கடந்த பல பத்தாண்டுகளாகவே ஆட்சியாளர்கள் வெளியிடாமல் மர்மமாகவே வைத்துள்ளனர். அரசுத்துறைகளில் ஆறரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் கூறுகின்றன. குறைந்தது 5 லட்சம் பணியிடங்களாவது காலியாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லையா?

மொத்தக் காலியிடங்களில் குரூப் 1 பணிகளின் எண்ணிக்கை 0.10% என்று வைத்துக் கொண்டால் கூட குறைந்தது 500 பணியிடங்கள் காலியாக இருக்க வேண்டும். ஆனால், வெறும் 26 பணியிடங்களுக்கு மட்டுமே ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படுகிறது என்றால், காலியிடங்களை நிரப்பவும், இளைஞர்களுக்கு வேலை வழங்கவும் தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே தோன்றுகிறது.

குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த பத்தாண்டுகளில் 6 முறை போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ளது. 09.11.2026ஆம் நாளிட்ட அறிவிக்கை மூலம் 85 பேரும், 01.01.2019 தேதியிட்ட அறிவிக்கை மூலம் 139 பேரும், 20.01.2020 தேதியிட்ட அறிவிக்கை மூலம் 69 பேரும், 21.07.2022 தேதியிட்ட அறிவிக்கை மூலம் 92 பேரும், 28.03.2024 தேதியிட்ட அறிவிக்கை மூலம் 90 பேரும், 01.04.2025ஆம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் 70 பேரும் குரூப் 1பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் எந்த ஆண்டிலும் இவ்வளவு குறைவாக ஆள்கள் தேர்வு செய்யப்படவில்லை.

அடுத்தடுத்து ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஆண்டுகளில் கூட, 2020ஆம் ஆண்டில் 69 பேரும், 2025ஆம் ஆண்டில் 70 பேரும் குரூப் 1 பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் 545 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு சராசரியாக 55 பேர் தேர்வாகியுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும் ஆண்டு சராசரியில் பாதிக்கும் குறைவாகவும், முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கும் மட்டுமே முதல் தொகுதி பணியிடங்களை நிரப்புவது நியாயமல்ல.

வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர்

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஆளும் த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,  அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்தகால ஆட்சியாளர்களுக்கு மாற்றாக புதிய கட்சியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர்த்தியுள்ள நிலையில்,   இந்த ஆட்சியில் அனைத்து காலியிடங்களும் முழுமையாக நிரப்பப்படும் என்று இளைஞர்கள் நம்புகின்றனர்.  ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் அவர்கள்தான்.

ஆனால், புதிய அரசு பதவியேற்ற பின்னர் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை, இப்போது வெளியிடப்பட்ட முதல் தொகுதி பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை ஆகிய இரண்டிலுமே, முந்தைய காலங்களில் நடத்தப்பட்ட ஆள்தேர்வுகளில் அறிவிக்கப்பட்டதை விட குறைவான காலியிடங்களையே அறிவித்திருப்பதன் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்துள்ளன.

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம் என்பது இரு வகைகளில் மிகவும் முக்கியமானது ஆகும். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது முதல் வகை என்றால், அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்கு அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் மிகவும் அவசியம் என்பது இரண்டாம் வகை ஆகும்.

100 ஆக அதிகரிக்க நடவடிக்கை

இந்த இரு காரணங்களையும் கடந்து புதிய ஆட்சியின் மீது இளைஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியதும் கட்டாயம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கும் குரூப் 1 பணிகளுக்கான ஆள்தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கையை இப்போதுள்ள 26லிருந்து குறைந்தது 100 ஆக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
வெளியுறவுத்துறையில் உதவித் தொகையுடன் பயிற்சி பெற சூப்பர் வாய்ப்பு... தமிழக மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
AI படிக்க ஆசையா? புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய B.Tech AI படிப்பு - 30 இடங்கள் ஒதுக்கீடு!
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
2 நாட்களில் 9 கொலைகள்; பெண் காவலரே பலி- என்ன செய்கிறார் டம்மி முதல்வர்? உதயநிதி கேள்வி
TN Chief Secretary : ‘புதிய தலைமைச் செயலாளருக்கு கடும் போட்டி’ ராஜேஸ் லக்கானிக்கு எதிராக பெரிய லாபி..!
‘தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளர் யார்?’ லாபி செய்யும் அதிகாரிகள்..!
EPS: ”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
”இந்த கணக்கு கூட தெரியாதா? எடப்பாடிக்கு அறியாமையா? அறிவீனமா?” அமைச்சர் வெங்கட்ரமணன் பதிலடி
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..? சிஎம் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய இபிஎஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
TN RAIN ALERT : இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
இடி, மின்னல், 50 கி.மீ. வேகத்தில் காற்று.! 11 மாவட்டங்களை குறிவைத்த கன மழை - எங்கெல்லாம் தெரியுமா.?
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
தமிழக ஆண்களின் அகால மரணம்: மதுவின் கோரப்பிடி- அன்புமணி அதிர்ச்சித் தகவல்!
மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
மாருதி சிஎன்ஜி ஆட்டோமேட்டிக்: ஸ்விஃப்ட், டிசையர், பலேனோவில் புதிய மைலேஜ் புரட்சி!
Embed widget