மேலும் அறிய

PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?

PUNE MURDER : வருங்கால கணவனை 400 அடி பள்ளத்தில் தனது காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து என முதலில் நம்பப்பட்ட நிலையில், இறுதியில் கொலை என போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புனே ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு திருமணம்

உண்மை காதலுக்காக உயிரையே கொடுக்கும் காதல் வரிகளுக்கு மத்தியில் காதலுக்காக வருங்கால கணவனை கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர செய்துள்ளது. அந்த வகையில் ம​கா​ராஷ்டி​ர மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் கேதன் விஷால் இவருக்கு வயது 25, இவரது குடும்பம் மிகவும் வசதி படைத்த குடும்பமாகும், இவர் குடும்பத்தினரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனராக கேதன் விஷால் இருந்துள்ளார். இவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த நிலையில் சியா கோயல் என்ற பெண்ணுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தனது வருங்கால மனைவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தங்​கள் பகு​தி​யில் உள்ள லோகா​காட் கோட்​டைக்கு சென்றுள்ளனர்.

பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த கேதன் விஷால்

அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில் 400 அடி பள்ளத்தில் தவறி கிழே விழுந்துள்ளார் கேதன் விஷால், இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்துள்ளார். இதனை பார்த்த வருங்கால மனைவி சியா கோயல் கதறி துடித்துள்ளார். பலத்த காற்று வீசியபோது புகைப்படம் எடுக்க முயன்றபோது கேத்தன் தவறி விழுந்துவிட்டதாக சியா கோயல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கேதன் விஷால் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் கேதன் விஷாலுக்கும், சியா கோயலுக்கும் திருமணம் நிச்சயம் நடைபெற்ற நிலையில்,  ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் ரூ.17 கோடி செலவில் இவர்களது திருமணத்தை ஆடம்பரத் திருமணம் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருந்தது.

சிக்கிய வருங்கால மனைவி

இந்த நிலையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதியன்று புனே அருகே உள்ள லோககாட் கோட்டை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் கேதன் அகர்வால் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் சியா கோயலுக்கும், சேத்தன் சவுத்ரி என்பவருக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இதனால் கேதனை திருமணம் செய்ய சியா கோயலுக்கு விருப்பமில்லாத காரணத்தால் காதலனுடன் இணைந்து இந்த கொடூர திட்டத்தை சியா செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிக்கியது எப்படி.?

சிசிடிவி, செல்போன் அழைப்புகள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் சியா மற்றும் சேத்தன் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பாக கடந்த ஜூன் 14-ம் தேதியே கேதன் விஷாலை கொலை செய்ய முயற்சியானது நடைபெற்றுள்ளது. அப்போது பாம்பு இருப்பதாக பயத்தை காட்டி மலை உச்சியில் இருந்து தள்ள முயன்றுள்ளதும் தெரியவந்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget