Crime : ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு... அரை நிர்வாணமாக தூக்கி வீசப்பட்ட பெண்...5 பேர் கொண்ட கும்பல் செய்த கொடூரம்...!
மத்திய பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்த பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Crime : மத்திய பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்த பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து சூரத் விரைவு ரயிலில் 32 வயது பெண்ணும், அவருடன் இரண்டு ஆண்களும் குஜராத் சென்றுக் கொண்டிருந்தனர். மூன்று பேரும் இரவு 10 மணிக்கு ரயிலில் ஏறி பொதுப் பெட்டியில் பயணம் செய்தனர். அப்பெட்டியில் சுமார் 70 பயணிகள் வரை இருந்தனர்.
அப்போது, 32 வயது பெண்ணை ரயிலில் பயணம் செய்து 5 பேர் அவர்களின் மொபைலில் புகைப்படம் எடுத்தனர். இதற்கு அந்த பெண்ணும், அவருடன் வந்த இரண்டு பேரும் மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த 5 பேரும் புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தனர். உடனே 5 பேரும் சேர்ந்து, அப்பெண்ணுடன் வந்த இரண்டு பேரை அடித்து உதைத்தனர். இதனால் 2 இளைஞர்களுக்கும், 5 பேர் கொண்ட கும்பலுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
அரை நிர்வாணமாக தூக்கி வீசப்பட்ட பெண்
இதனை அடுத்து, அந்த இடத்தில் இருந்து கதவு பக்கம் வந்து அந்த பெண் அமர்ந்திருந்தார். அங்கேயும் 5 பேரும் சென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அதோடு இல்லாமல், அந்த பெண் அணிந்திருந்த சேலையை அவிழ்த்தனர்.
மேலும், அந்த பெண்ணை அரை நிர்வாணமாக்கி ஓடும் ரயிலில் இருந்து கிழே தள்ளிவிட்டனர். அவருடன் வந்த இளைஞர்களையும் கிழே தள்ளிவிட்டனர். நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. ஆனால் ரயிலில் இருந்த யாரும் இதனை தட்டிக் கேட்கவில்லை. இதனை அடுத்து, கிழே தள்ளிவிட்ட அந்த பெண்ணும், இரண்டு வாலிபர்களும் காயங்களுடன் காட்டிற்குள் நடத்து சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
அப்போது 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றவுடன் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தனர். அங்கு மூன்று பேரையும் வழியில் ஒரு மூதாட்டி பார்த்தார். காயங்களுடன் இருந்த மூன்று பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து, இதுகுறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது.
சமீபத்தில் மும்பையில் ஓடும் ரயிலில், தேர்வு எழுதச் சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுபோன்று, ரயிலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க