மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; ஜாமீன் மனு தள்ளுபடி.. சிபிஐ அதிரடி, அடுத்த கட்ட விசாரணை எப்போது?
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு: தனிப்படை காவலர் கண்ணன் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட DSP, ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் அனுப்பபட்டு தலைமை அமர்வு நீதிபதிக்கு அனுப்பபட்டு விசாரணை தொடங்கவுள்ளது.
அஜித்கொலை வழக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு , சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 14 ஆம் தேதி முதல் டி எஸ் பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நிகிதா அஜித்குமார் உடன் அழைத்து செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன் மற்றும் நண்பர்கள் அஜித்குமார் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற விசாரணை
மேலும் இந்த வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநராக இருந்த தனிப்படை காவலர் ராமச்சந்திரனை ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவத்தன்று பணியில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய 4 பேரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கில் சிறையிலுள்ள தனிப்படை காவலர் கண்ணன் தனக்கு ஜாமின் வழங்க கோரிய மனு இன்று மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜோசப்ஜாய் முன்பாக விசாரணைக்கு வந்தபோது கண்ணனின் ஜாமின்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தொடர்பான விசாரணை தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.
சிபிஐ தரப்பில் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மதுரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கை விரைவில் எண் இடப்பட்டு டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகிய நான்கு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதன் நகல் வழங்கப்பட்டு பின்னர் தலைமை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். பின்னர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருந்து 5 ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு அதன் பின்பு அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது.





















