Crime: 13 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை.. உடந்தையான சகோதரி.. நாட்டை உலுக்கும் கொடூரம்..
சொந்த தங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட சகோதரி உதவியாக இருந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது 13 வயது சிறுமி ஒருவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த மாதம் 28-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 13 வயதான சிறுமி ஒருவரை அவருடைய 18 வயது சகோதரி கழிவறைக்கு அழைத்து செல்வதாக கூறி காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த சில நபர்கள் அச்சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர்கள் அந்த சிறுமியை கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பெயரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அச்சிறுமியின் 18 வயது சகோதரி மற்றும் அவருடைய நண்பர்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அந்தச் சிறுமியின் சகோதரியான 18 வயது பெண் சிலருடன் உறவு இருந்து வந்துள்ளது. இதை அறிந்து கொண்ட அந்தச் சிறுமி அடிக்கடி இது தொடர்பாக அவரிடம் கேட்டுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சண்டைகளால் ஆத்திரம் அடைந்த சகோதரி அந்தச் சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு தன்னுடைய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். அவர்கள் இச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ரஞ்சித் சௌஹான், அமர் சிங், அன்கித் மற்றும் சந்தீப் சௌஹான் ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அச்சிறுமியின் சகோதரி மற்றும் அர்ஜூன், தீபு சௌஹான் என்ற மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சொந்த தங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ய சகோதரி உதவியாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்