Kodanad Case Live Updates: கோடநாடு விசாரணை கள ரிப்போர்ட்: செப்.2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி!
Kodanad Murder Case LIVE Updates: நீலகிரி மாவட்டம் கோடநாடு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடுத்தடுத்த அப்டேட் செய்திகளை இங்கு காணலாம்.
LIVE
Background
Kodanad Case LIVE Updates:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை வழக்கு தொடர்பான விசாரணை உதகை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சயன் உள்ளிட்டோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்திய நிலையில், இன்று விசாரணை அறிக்கை சம்மந்தப்பட்ட உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்ய உள்ளனர். அதன் அடிப்படையில் நீதிமன்றம் ஏதேனும் உத்தரவோ, சம்மனோ அனுப்ப வாய்ப்புள்ளது.
Kodanad Case LIVE: செப்.2ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
கோடநாடு வழக்கு விசாரணையை செப்.2ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஒத்திவைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விசாரணைக்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
கோடநாடு வழக்கில் காரசார விவாதம்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை துவங்கிய நிலையில், தற்போது காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி மீது எழுந்த முதல் புகார்!
ஜனவரி 23, 2019:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், ‛சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் எனது தூண்டுதலில் பேசவில்லை,’ என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தனது குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
சயானிடம் விசாரணை..தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்
கோடநாடு விவகாரம் தொடர்பாக சயானிடம் கூடுதல் விசாரணை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊட்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. சயான் ஊட்டியில் தங்கி ஜாமீன் கையெழுத்திட்டு வந்த நிலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது
பூதாகரம் எழுப்பிய செய்தியாளர் சந்திப்பு
ஜனவரி 11,2019:
கோடநாடு விவகாரம் தொடர்பான ஆவணப்படத்தை டெல்லி செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்ட டெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், குற்றம்சாட்டப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை பேச வைத்தார்.