Crime : கடனை அடைக்க வேலைக்குச் சென்றதால், பெண் மீது கணவன் நிகழ்த்திய கொடூரம்.. பதைபதைக்க வைத்த புகைப்படங்கள்
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திலீப்பின் விருப்பத்திற்கு மாறாக சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சென்றதால் அவரது மனைவியை அடித்ததாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மனைவியை கொடூரமாக தாக்கி படம் எடுத்த 27 வயது இளைஞரை மலைகீழ் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து போலீசார் திலீப்பை கைது செய்தனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திலீப்பின் விருப்பத்திற்கு மாறாக சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சென்றதால் அவரது மனைவியை அடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், திலீப், தனது மனைவியை மோசமாகத் தாக்குவதைக் காணலாம். "கடனை அடைக்க நான் வேலைக்கு செல்ல வேண்டும்" என திலீப்பின் மனைவி கூறுவது வீடியோவில் கேட்கிறது.
அந்த வீடியோவில் அந்த பெண்ணின் முகத்தில் ரத்தம் வழிகிறது. திலீப்பின் மனைவி அளித்த புகாரின் பேரில், மலையன்கீழ் போலீசார் கொலை முயற்சி மற்றும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை கைது செய்தனர்.
முன்னதாக, ஜூன் மாதம், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர், வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, அவரது கணவரைத் தோளில் சுமந்து, காலணி மாலை அணிவிக்க வைத்து சாலையில் அழைத்து செல்லப்பட்டார். மேலும், அவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
தேவாஸ் மாவட்டத்தில் உள்ள போர்பதாவ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 11 பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை என்பது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. குடும்ப வன்முறைக்கு உள்ளாவதாக 38.2 சதவிகிதம் பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இது, குடும்ப நல ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆய்வுக்கு உட்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் குடும்ப வன்முறையை சந்திப்பதை எடுத்துக்காட்டுகிறது.
அவர்களில் உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொள்வோர் 28.7 சதவிகிதம், பாலியல் வன்முறையை எதிர்கொண்டிருப்போர் 9.1 சதவிகிதம், உளவியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகியிருப்போர் 12.6 சதவிகிதம், உணர்வுரீதியான வன்முறையை சந்தித்தவர் 15.4 சதவிகிதம் ஆகும்.
திருமணத்திற்கு பின் ஒருமுறையாவது அறைவது, குத்துவது உள்ளிட்டு உடல் ரீதியிலான வன்முறையை எதிர்கொண்டிருப்பதாக 28.7 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள். சுய மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதும் அதிகமாக இருக்கிறது. வன்முறைக்கு ஆளான பெண்களில் 32.3 சதவிகிதம் பேர் மருத்துவ சிகிச்சையை நாட நேர்ந்திருப்பது நிலைமையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள், பெரும்பாலும் குடிப்பழக்கம் மிகுதியாக கொண்டிருப்பதை ஏற்கனவே ஆய்வுகள் வெளிப்படுத்தின. இந்த ஆய்விலும் அதுவே வெளிப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையைத் தடுக்க சட்டம் வந்த பின்னரும் கூட, ஆணாதிக்க சமூக கட்டமைப்பில், இது குற்றம் என்பதை விட, பெண்கள் சகித்து கொண்டு அல்லது அனுசரித்து போக வேண்டிய விஷயம் என்பதாகவே பார்க்கப்படுகிறது.
திருமணத்துக்குப் பின், மனைவி தனித்துவம் இழந்து கணவனின் உடமையாகக் கருதப்படும் பெண்ணடிமைத்தன சிந்தனையின் வெளிப்பாடே இது. படித்த பெண்களும், பொருளாதார ரீதியாக சுயமாக முடிவு மேற்கொள்வோரும் வன்முறைக்கு ஆளானாலும், அது ஓரளவு குறைவாக உள்ளது என்பதும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.
இந்த வன்முறைப் புகைப்படங்கள் வாட்சப்பில் பரவிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது