போதைப்பொருள் கொடுத்து மாணவியை வன்கொடுமை செய்த மாணவன்! வலையில் 20க்கு மேற்பட்ட பெண்கள்!
ஒரு நாள் எதார்த்தமாக மாணவியின் பெற்றோர்கள் மாணவனின் செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது, தனது பெண் குறித்து ஆபாச வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தனியார் பள்ளி ஒன்றில் வெளிமாநிலத்தில் படித்து வந்த 9 ம் வகுப்பு மாணவி புதிதாக சேர்ந்துள்ளார். புதிதாக சேர்ந்த மாணவி சில காலம் மற்ற மாணவர்களிடம் பேசி பழக நாளாகியுள்ளது. தொடக்கம் முதலே தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது, இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அதே வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் அந்த மாணவியுடன் நட்பாக பழகி தன் மீதான நம்பிக்கையை பெற்றுள்ளார்.
தொடர்ந்து அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவியின் பெற்றோரிடம் மிகக் குறுகிய காலத்திலேயே நற்பெயரையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், அந்த மாணவி பழைய பள்ளி மற்றும் நண்பர்கள் குறித்து அவ்வபோது மிஸ் செய்வதாக அந்த மாணவரிடம் தெரிவித்துள்ளார். இதை பயன்படுத்தி கொண்ட மாணவன், மாணவிக்கு போதைப்பொருளை கொடுத்து இதை பயன்படுத்தினால் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பழைய நினைவுகள் மறந்து விடும் என்றுள்ளார். இதை நம்பிய அந்த பெண் தொடர்ந்து பயன்படுத்தி வரவே, போதைப்பொருளுக்கு முழுமையாக அடிமையாகியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் போதைப்பொருளை எடுத்து கொள்ளாமல் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, இந்த மாணவனும் மாணவியிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ச்சியாக தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
ஒரு நாள் எதார்த்தமாக மாணவியின் பெற்றோர்கள் மாணவனின் செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது, தனது பெண் குறித்து ஆபாச வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த மாணவியை போதைப்பொருள் மீட்பு மையத்தில் அனுமதித்து 2வார சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
பின்னர், மாணவியின் பெற்றோர்கள் கண்ணூர் டவுன் காவல்நிலையத்தில் மாணவர் மீது புகார் கொடுத்துள்ளனர். காவல்துரையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த மாணவன் இதே போல் 20 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதைப்பொருளை கொடுத்து அவர்களை அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவன் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சிறுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கம் செய்தது.
மேலும், அந்த மாணவனுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்சோ சட்டம் :
18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு :
- Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
- Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
- Sexual Assault - பாலியல் தொல்லை
- Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
- Sexual Harassment - பாலியல் தொந்தரவு
- Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.
- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
- இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
- 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்