71 வயது முதியவருடன் நெருங்கிப் பழகிய இளம்பெண்....போட்டோ எடுத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்..!
கேரளாவில் மீண்டும் honey trap -ல் சிக்கிய 71 வயது முதியவர், புகாரையடுத்து 35 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டார்.
71 வயது முதியவருடன் தனிமையில் இருந்து, பின்னர் புகைப்படங்களை எடுத்துவிட்டு, சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவதாக கூறி 50 லட்சம் கேட்டு மிரட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளம்:
கேரள மாநிலம் திருச்சூரில், எருமப்பட்டி - திப்பிலசேரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ராஜி. இவர் குந்நங்குளம் என்ற பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவருடைய ஆண் நண்பர் வழியாக சாவக்காடு பகுதியை சார்ந்த 71 வயது முதியவருடன் ராஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த முதியவர் 20 வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து ராஜியும், முதியவரும் இவருடைய பியூட்டி பார்லர் அறை ஒன்றில் தனிமையாக இருந்து உள்ளனர். தனிமையாக இருக்கும் புகைப்படங்களை, ராஜி தனது செல்போன்களில் எடுத்துள்ளார். பின்பு இந்த நிர்வாண புகைப்படங்களை காண்பித்து, முதியவரின் உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி 50 லட்சம் ரூபாய் கேட்டு வந்துள்ளார்.
புகார்:
அவ்வப்போது மிரட்டி முதியவரிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் வரை ராஜி பறித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதியவர் இந்த விஷயங்களை கூறி குந்நங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கைது
இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ராஜியை கைது செய்தனர். அதை தொடர்ந்து இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக வசதியானவர் என்று தெரிந்து, ஆண் நண்பருடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜியின் ஆண் நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மற்றுமொரு செய்தி :