கரூர் மாணவி தற்கொலை விவகாரம் : எங்களுக்கு சம்பந்தமில்லை என பள்ளி நிர்வாகம் வாட்சப் கடிதம்
’’இந்த நிகழ்வில் ஆசிரியர்களுக்கோ, பள்ளிக்கோ எந்த வித தொடர்பும் இல்லை என்பதை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களாகிய உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்’’
கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் அரசு காலனி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை என மாணவி கடிதத்தில் பாலியல் தொல்லையால் சாகுர கடைசி பெண்ணும் நானா தான் இருக்கணும் என்னை யார் இந்த முடிவை எடுக்க வாச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில வாழ ஆசைப்பட்ட ஆசைப்பட்டேன் ஆனா இப்ப பாதியிலேயே போறேன் இன்னொரு தடவை இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும் பெருசாகி நிறைய பேத்துக்கு ஹெல்ப் பண்ணனும் ஆசை ஆனால் முடியவில்லை என பள்ளி மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடலை பாலம்மாள் புரம் பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கரூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி பயின்ற தனியார் பள்ளி நிர்வாகம் சார்பாக பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதில் அன்புள்ள பெற்றோர், மாணவ செல்வங்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளியின் நலன்விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம். நமது பரணி பார்சு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு நம்மையெல்லாம் சொல்லொணா துயரத்திற்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்களுக்கோ, பள்ளிக்கோ எந்த வித தொடர்பும் இல்லை என்பதை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களாகிய உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றின் திட்டில் சிக்கிய 150 ஆடுகள் உட்பட 2 பேர் பத்திரமாக மீட்பு