Crime: டீக்கடை உரிமையாளரிடம் மது குடிக்க பணம் கேட்டு வாக்குவாதம் - கரூரில் அதிர்ச்சி
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் முன்புறம் டீக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
கரூரில் டீக்கடை உரிமையாளரிடம் மதுகுடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அங்கு டீ குடிக்க வந்த நபர் ஒருவர் தட்டிக் கேட்டபோது, திமுகவைச் சார்ந்த மூன்று நபர்கள் தாக்கி செல்போனைப் பறித்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கரூர் ரயில் நிலையம் அருகே டீ கடையில் மது குடிக்க பணம் கேட்டு கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டியும், டீ குடிக்க வந்த நபரிடம் செல்போன் பறித்து அவரை அடித்த 3 பேர் திமுகவினர் ஸ்ரீதர், பவுன், கந்தன் ஆகியோர் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் முன்புறம் டீக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
அதே பகுதியில் காயத்ரி நகர் பகுதியை சேர்ந்த லாவண்யா அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். அந்த டீக்கடையில் கடந்த டிசம்பர் 26ம் தேதி இரவு திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் ஸ்ரீதர், பவுன், கந்தன் என்ற 3 பேரும் ஆட்டோவை நிறுத்திவிட்டு டீக்கடைக்குள் சென்று பணம் தராமல் சிகரெட் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் இல்லை என்று கூறியதற்கு மது குடிக்க பணம் வேண்டும் என்றும், தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி உள்ளனர்.
கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை மூன்று பேரும் சேர்ந்து அடித்து, அவர் வைத்திருந்த செல்போனை பறித்து கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து அடித்து விரட்டி உள்ளனர். அப்போது அதை தட்டிக்கேட்ட கடை உரிமையாளரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தள்ளி உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குறிப்பாக மதுபானம் குடிக்க பணம் கேட்டு மூன்று நபர்கள் டீக்கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அங்கு டீ குடிக்க வந்த நபரின் செல்போனை பறித்து தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத குறித்து டீக்கடை உரிமையாளர் லாவண்யா கரூர் நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்க கோரி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.