கரூர்: தாந்தோணிமலை அருகே லாரியில் தூங்கிய டிரைவர் மர்ம சாவு
லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 42 லாரி டிரைவர். இவர் கோவில்பட்டியில் இருந்து கரூருக்கு லாரியில் லோடு ஏற்றுவதற்காக வந்தார்.

கரூர் தாந்தோணி மலை அருகே லாரியில் தூங்கிய டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் வயது 42 லாரி டிரைவர். இவர் கோவில்பட்டியில் இருந்து கரூருக்கு லாரியில் லோடு ஏற்றுவதற்காக வந்தார். பின்னர் தாந்தோணி மலை காளியப்பனுர் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு லாரியிலேயே அயர்ந்து தூங்கி விட்டார். வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்தது, அங்கிருந்தவர்கள் பாலமுருகனை பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதுகுறித்து உடனடியாக தாந்தோணி மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து. பாலமுருகனை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலமுருகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தாந்தோணி மலை போலீசார் வழக்குப்பதிந்து பாலமுருகன் எப்படி இறந்தார் ? அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

