மேலும் அறிய
Advertisement
6 வருடங்களாக காதலித்து பிரிந்த ஜோடி: ஆசைவார்த்தையால் ஏமாற்றியதாக காதலி புகார்! காதலன் கைது!
" புகாரின் பேரில் போலீசார் அசோகனை கைது செய்து விசாரணை செய்ததில் சுமித்ராவை ஏமாற்றியது போலீசருக்கு தெரிய வந்தது "
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (26). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவரும் ஒரகடம் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் சுமித்ரா (24) ஆகிய இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
மேலும் அவ்வப்போது இருவரும் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதகளுக்கு முன்பு பிரிந்து உள்ளனர். இந்த நிலையில் அசோகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதாக சுமித்ராவிற்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து சுமித்ரா ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோகன் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அசோகனை கைது செய்து விசாரணை செய்ததில் சுமித்ராவை ஏமாற்றியது போலீசருக்கு தெரிய வந்தது. பின்னர் அசோகன் மீது வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion