மேலும் அறிய

Kanchipuram : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. விபத்தில் உயிரிழப்பு.. நடந்து என்ன ?

உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் காஞ்சிபும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்  : காஞ்சிபுரம்  அருகே குண்டுகுளம்  அம்பேத்கர் தெருயை சேர்ந்தவர் லோகநாதன். அவருடைய மகன் சீனிவாசன் (வயது 26) என்பவர் நேற்று இரவு கீழ்க்கதிப்பூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் 30 மதுபான பாட்டில்களை வாங்கிக் கொண்டு சென்றபோது, காஞ்சிபுரம் கலால் பிரிவு காவலர்கள் அவரை மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்து 35 மதுபான பாடல்களை பறிமுதல் செய்தனர். மேலும் சீனிவாசன் என்ற நபரை கலால் துறையினர் பைக்கில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது , சீனிவாசன் பைக்கில் இருந்து இறங்கி தப்பி  ஓட முயன்றதாக கூறப்படுகிறது.

Kanchipuram : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. விபத்தில் உயிரிழப்பு.. நடந்து என்ன ?

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த தனியார் நிறுவன பேருந்து ஒன்ரு சீனிவாசன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்துவிட்டார். சீனிவாசனை கலால் துறையினர் முறையாக அழைத்து வராமல் வந்ததால்தான் இந்த மரணம் ஏற்பட்டதாக சீனிவாசனின் உறவினர்கள் கூறி சடலத்தை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். ஏ.டி .எஸ்.பி சார்லஸ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள்  சீனிவாசனின் உறவினர்களுடன் சமாதான பேச்சு வார்த்தைக்கு முயன்ற போது , சீனிவாசன் இறப்புக்கு கலால் துறையினர் தான் காரணம், அதற்கு நீதி விசாரணை தேவை என கூறி மக்கள் மன்றத்தினர்  சடலத்தை வாங்க மறுத்து வந்தனர். சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் மக்கள் மன்றத்தினர் அரசு தலைமை மருத்துவமனை வாயிலின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Kanchipuram : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. விபத்தில் உயிரிழப்பு.. நடந்து என்ன ?

உயிரிழந்த  சீனிவாசனின் நண்பர் இணைப்பிரியன் தெரிவித்ததாவது : "  நான் வேலையை முடித்துவிட்டு கடைக்குச் சென்றேன் அப்பொழுது.   சீருடையில் இல்லாத இரண்டு போலீசார்  சீனிவாசனிடம் விசாரணை   செய்து கொண்டிருந்தார்கள். அங்கு அடையாளங்களை போலீசார் குறித்து கொண்டிருந்தார்கள். சீனிவாசன்  ஏதோ வீட்டு பங்க்ஷன்க்கு  மதுபானத்தை வாங்கியுள்ளார். அக்கம் பக்கத்துடன் விசாரித்த பொழுது போலீஸ் அவரை பிடித்து விட்டது என கூறினார்கள். நான் அப்பொழுது கிட்டே செல்லவில்லை, மெக்கானிக் வேலை செய்துவிட்டு அதே துணியில் வந்து இருந்ததால் வீட்டிற்கு சென்று துணியை மாத்திக் கொண்டு  அவர் வீட்டிற்கு சென்று தகவல்   தெரிவித்தேன்.  சீனிவாசனின் தம்பியிடம் உன் அண்ணனை போலீஸ் பிடித்துள்ளதாக கூறினேன். 8  மணி அளவில்  இந்த சம்பவத்தை நான் பார்த்திருந்தேன்  .  9 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக அவர் தம்பி என்னிடம் கூறி  அழுதார். 

Kanchipuram : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. விபத்தில் உயிரிழப்பு.. நடந்து என்ன ?
 சீனிவாசனின்   தம்பி விக்னேஷ் தெரிவித்ததாவது: " எங்கள் வீட்டில்  சுப நிகழ்ச்சி ஒன்று  நடைபெற இருந்தது.    அதற்காக மதுபானம் வாங்க  சென்றுள்ளார். அப்பொழுது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். நான் கடையில் இருந்த பொழுது என்னிடம்  , எங்கள் பகுதியை சேர்ந்த அண்ணன் ஒருவர் உங்கள் அண்ணனை போலீஸ் பிடித்து விட்டது என தெரிவித்தார்கள் போலீசார் எங்கள் அண்ணனை இழுத்துச்   சென்றனர்.  அதன் பிறகு போலீசார் எங்களை கலால் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறினார்கள்.

Kanchipuram : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. விபத்தில் உயிரிழப்பு.. நடந்து என்ன ?

நாங்கள் கலால் காவல் நிலையத்திற்கு சென்ற பொழுது,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விபத்து ஏற்பட்டு விட்டது என கூறினார்கள்.  அங்கு சென்றால் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் எனக் கூறினார்கள் அங்கு வந்து பார்த்தால்,  உயிரிழந்து இருந்தார்.  என் அண்ணனுடைய இரு சக்கர வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்றார்கள்.  எங்கள் வீட்டில் நேரடியாக சொல்லவில்லை போன் மூலமாகவே தகவல் தெரிவித்தார்கள்.  என் அண்ணனை காவலர்கள் அழைத்துச் சென்ற பொழுது நாங்கள் ,  கதறி கொண்டே சென்றோம் ஆனால் அவர்கள் நிறுத்த கூட இல்லை "  என அழுது கொண்டே தெரிவித்தனர்.

மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மகேஷ் தெரிவித்ததாவது :  சீனிவாசனின்  வீட்டு வழியாகவே சீனிவாசனை அழைத்துச் சென்றுள்ளார்கள்.  சீனுவாசனின் கை  தலையில் பின்புறம் வைத்துக் கொண்டு சென்றுள்ளார்.  போலீசார் அடித்திருக்கலாம் என சீனிவாசனின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.   தொலைபேசியில் தொடர்பு கொண்டு குடும்பத்தினரிடமும் பேசி இருக்கிறார்.  10 நிமிடம் கழித்து காலால் காவல் நிலையத்திற்கு வருமாறு குடும்பத்தினரிடம் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Kanchipuram : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. விபத்தில் உயிரிழப்பு.. நடந்து என்ன ?

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற விபத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்திருக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் அழைத்துச் செல்லும்போது காவலர்கள் முறையான  பாதுகாப்புடன் அழைத்துச் சென்று இருக்க வேண்டும். நடைபெற்றது விபத்தாகவே இருந்தாலும்  அதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரத்தை வழங்க வேண்டும்.  இது சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க உள்ளோம்.  மாவட்ட கண்காணிப்பாளர்   இது குறித்து உரிய உத்திரவாதம் அளிக்கும் பட்சத்தில் தான்  உடலை பெற்றுக் கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget