மேலும் அறிய
காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!
Kanchipuram News : ' பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பகலிலேயே நடந்தேறிய கொடூர கொலை '
![காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..! Kanchipuram, the raiders cut and killed A brutal murder that happened in broad daylight in a public area காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/a682b9bf8b3ddc34e520961a6b1d12151703589451986113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சம்பவ இடத்தில் போலீஸ்
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா என்கிற சரவணன் (35). பிரபா மீது கொலை ,கொள்ளை , கஞ்சா விற்பது, திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்லவர் மேடு பகுதியில் குட்டி ரவுடியாக பிரபா வலம் வந்துள்ளார். பிரபா அவப்பொழுது, சிறைக்கு செல்வதும் ஜாமினில் வெளி வருவதுமாக அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
மர்ம கும்பல்
இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் பிரபா கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது தப்பி ஓடியதில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. கால் முறிவு ஏற்பட்டதால் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிளேட் வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஜாமினில் வெளியே இருக்கும் பிரபா இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், ஆஜராக பல்லவர் மேடு பகுதியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, வெள்ளை நிற இண்டிகா காரில் வந்த மர்ம கும்ப கும்பல் அவரை இடிப்பது போல் முயற்சி செய்துள்ளது.
![காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/6e9a6fcc07595973eb3fc9461355c0371703589498383113_original.jpg)
சரமாரியாக வெட்டி விட்டு தப்பி
இதனால் சுதாரித்த, பிரபா அங்கிருந்து ஓட முயற்சி செய்துள்ளார். காலில் அறுவை சிகிச்சை செய்ததால் வேகமாக ஓட முடியாத பிரபா இந்த கும்பலிடம் சிக்கி உள்ளார். காரில் இருந்து ஹெல்மெட் அணிந்திருந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப் பகலிலே சாலையில் வைத்து, கழுத்து, கண், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரபா துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/9cd0947519447e33eea3e0df0f0a2cb91703589531245113_original.jpg)
போலீசார் நடத்திய விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தேறியது தெரியவந்தது :
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சேர்ந்தவர்கள் ரகு மற்றும் நாராயணமூர்த்தி ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்தவேலி அம்மன் கோவில், அருகே ரகு மற்றும் நாராயண மூர்த்தி ஆகிய இருவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்த பொழுது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது. இதனால் ரகு நாராயண மூர்த்தியை கொலை செய்துள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்
தனது சகோதரனை கொலை செய்த ரகுவை பழி வாங்குவதற்காக, நாராயண மூர்த்தியின் சகோதரன், சரவணன் என்கிற பிரபா பலமுறை முயற்சி செய்து வந்துள்ளார். இந்தநிலையில் பிரபா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரகுவின், மற்றொரு சகோதரரான தேமுதிக, மாநில பேச்சாளர் சரவணன் என்பவரை ரகு கொலை செய்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் அப்பொழுது, காஞ்சிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
![காஞ்சிபுரத்தில் ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..! 10 வருடங்களாக தொடரும் பழிக்கு பழி கொலைச் சம்பவங்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/26/106282937b53dd32639e2e952e88db921703589560302113_original.jpg)
மூன்று வருடங்களுக்கு முன்பு
கடந்த 4 வருடங்களுக்கு, ரகுவின் மற்றொரு சகோதரரான ஆட்டோ ஓட்டுநர் செந்தில் என்பவரை இரண்டு முறை கொலை முயற்சி நடந்தபோது செந்தில் தப்பி உயிர் பிழைத்துள்ளார். இதனை அடுத்து செந்திலை மூன்று வருடங்களுக்கு முன்பு வீட்டருகே நாட்டு வெடிகுண்டு வீசி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மிக கொடூரமான நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் பிரபா பெயர் இடம் பெற்று இருந்தது. இந்த இரண்டு கொலை சம்பவங்களுக்கு பழி வாங்குவதற்காகவே , இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சிசிடிவி காட்சி
பிரபாவை ஓட ஓட வெட்டி மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் பகுதியில் அதுவும் பகலிலேயே இந்த கொலைச் சம்பவம் நடந்தேறி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion