Crime: செல்போனில் விளையாடாதே.. படி என்று கூறிய அம்மா.. தூக்கில் தொங்கிய மகள்..!
தாய் திட்டியதால் மனம் உடைந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி, தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி பானு. கணேஷ் மற்றும் பானுவிற்கு திருமணம் ஆகி சில வருடங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களிலே கணேஷ் உடல்நிலை குறைவால் உயிரிழந்து உள்ளார். இதனை அடுத்து கணேஷின் மனைவி பானு, பெண் குழந்தையை தனியாக வளர்த்து வந்துள்ளார்.
கணவனுடன் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வந்த பானு தனது தாய் வீடான, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், திருமங்கை ஆழ்வார் பகுதியில் தனது குழந்தை பாக்கியலட்சுமியுடன் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். பானு ஆயக்குளத்தூர் அங்கன்வாடி ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். பாக்கியலட்சுமி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் .
தனியாக குழந்தையை வளர்த்து வரும் பானு, தனது மகள் நன்றாக படிக்கவில்லை என அடிக்கடி திட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ( 21.7.2022 ) மாலை 5 மணிக்கு தனது வீட்டில் மாடியில் உள்ள அறையில் செல்போன் மூலம் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால், பானு திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி கழிவறையில் துப்பட்டாவால் தூக்கு மாட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக கழிவறைக்கு சென்ற மகள் திரும்பாததால், பதற்றத்துடன் பானு கதவை உடைத்து பார்த்துள்ளார். அங்கு தூக்கில் தொங்கியபடி மகள் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்கும் போது, இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்