ஸ்ரீபெரும்புதூரில் பாலியல் தொழிலாளி சடலமாக மீட்பு - பெண்ணின் கணவன் மற்றும் பெண் ஏஜெண்ட் கைது
சடலமாக மீட்கப்பட்ட ப்ரியா என்ற பெண் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பாலியல் தொழில் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது
![ஸ்ரீபெரும்புதூரில் பாலியல் தொழிலாளி சடலமாக மீட்பு - பெண்ணின் கணவன் மற்றும் பெண் ஏஜெண்ட் கைது Kanchipuram: Sex worker's body recovered in Sriperumbudur - Woman's husband and female agent arrested ஸ்ரீபெரும்புதூரில் பாலியல் தொழிலாளி சடலமாக மீட்பு - பெண்ணின் கணவன் மற்றும் பெண் ஏஜெண்ட் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/21/b7b3a738188c3c0103391297247f6543_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில், நேற்று இரவு 23 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளம் பெண்ணின் உடல் அருகே கைப்பற்றப்பட்ட பண பையில் இருந்த தடயங்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் காவிரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ப்ரியா என்பது, அவர் பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. வல்லம் வடகால் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியாவும், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த அப்பெண்ணின் காதலன் வெங்கடேசனும் (25) என்பவரும் சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளார்கள் என்பதை காவல்துறையினர் விசாரணையின் மூலம் கண்டுபிடித்தனர்.
அந்தப் பெண்ணிடம் கிடைத்த தடயத்தை வைத்து விசாரணை மேற்கொண்டதில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்ற பாலியல் தொழில் பெண் ஏஜெண்ட்டும், காதலன் வெங்கடேசனும் காவல்துறையிடம் சிக்கினர். விசாரணையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டல் மற்றும் லாட்ஜ் ஆகியவற்றில் தங்கி ஜோதி, பல பெண்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும், அப்பகுதியை சேர்ந்த சில நபர்களுக்கு பிரியா உள்ளிட்ட பெண்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பியதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. பிரியா என்ற பெண்ணுக்கு ஏற்கனவே , திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தன் கணவனைப் விட்டு பிரிந்து, காதலன் வெங்கடேசனுடன் சேர்ந்து கொண்டு இவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், ப்ரியா மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்த நிலையில், பிரியா அடித்து கொலை செய்யப்பட்டாரா , ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில், ஜோதி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் ஸ்ரீ பெரும்புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.
மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)