மேலும் அறிய
Advertisement
Rowdy Shankar | சுற்றி வளைக்கப்படும் காஞ்சி ரவுடிகள்.. பிரபல ரவுடி சங்கரின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
பி.பி.ஜி.டி சங்கர் பிரபலமாவதற்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரபல ரவுடி குமரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டன
பிபிஜி குமரன்
காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீ ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள, பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்தவர் பிபிஜி குமரன், படிக்கும் காலத்திலேயே, தன் தாயுடன் சேர்ந்து, சாராயம் விற்றுவந்தார். படிப்பை முடித்த பிறகு, புரட்சி பாரதம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். சாராய வியாபாரியாக இருந்து வந்த குமரன் தனது ஆதிக்கத்தின் மூலம் தனியா தொழிற்சாலைகளிலிருந்து ஸ்கிராப் சொல்லப்படும் இரும்புக் கழிவுகளை வாங்கிவிற்கும் பணியை, 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தில் துவங்கினார். படிப்படியாக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் முதலில் சிறு குறு நிறுவனங்கள் அக்காலத்தில் தான் ஸ்ரீபெரும்புதூரில் அதிதீவிரமாக வளர்ச்சி அடைந்து வந்தது.
இதனைப் பயன்படுத்தி தன்னை அதிகார மையமாக மாற்றி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். படிப்படியாக, ஸ்ரீ பெரும்புதூரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில், கழிவுகளை வாங்கி விற்கத் துவங்கினார். பணம் குவியத் துவங்கியது, ரியல் எஸ்டேட் தொழில், கட்ட பஞ்சாயத்து போன்றவற்றில், ஈடுபடத் துவங்கினார். சினிமா துறையின் மீது உள்ள ஆசையால் படம் ஒன்றை தயாரித்தார் . அதிமுக ஆட்சிக்கு வந்த பொழுது விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததால் அதிமுக இவரை கட்சியில் இருந்து விலகியது.
பிபிஜி குமரன் கொலை
2011 ஆம் ஆண்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற குமரன் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து அதிமுகவில் போந்தூர் குட்டி ( எ ) வெங்கடேஷ் என்பவரிடம் தோல்வி அடைந்தார். குமார் தன்னை ஏதாவது செய்துவிடுவாரோ என்ற பயத்தில் வெங்கடேஷ், குன்றத்தூர் வைரவன் , போந்தூர் செந்தில் ராஜன் ஆகியோருடன் இணைந்து கூலிப்படையை பயன்படுத்தி, நாட்டு வெடிகுண்டுகளை வீசி 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி குமரனை தீர்த்துக்கட்டினர்.
பி.பி.ஜி.டி சங்கர்.
இந்தளவிற்கு செல்வாக்கான குமரனின் உறவினரான அவர்தான் பி.பி.ஜி.டி சங்கர். சங்கர் மீது ஸ்ரீபெரும்புதூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் 2004–ம் ஆண்டுக்கு முன்பு வரை பி.பி.ஜி.குமரனுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்தார். குமாரன் செய்த அனைத்து சமூகவிரோத செயல்களிலும் பங்கு பெற்றார். குமரனை கொலை செய்த வெங்கடேசன் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சங்கர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து தனது குமரனின் பெயரை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வருகிறார்.
பி.பி.ஜி.டி சங்கர் மீது 15 வழக்குகள் , மூன்று குற்றப்பத்திரிகையும் தமிழக காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி பிரிவு மாநில பொருளாளராகவும் வளர்புரம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து வருகிறார். காஞ்சிபுரம் டிஐஜி சத்யபிரியா மற்றும் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளராக இருந்துவரும் சுதாகர் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் படப்பை குணா அவை தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
பினாமி சொத்துக்கள் முடக்கும்
மேலும் ரவுடிகளின் பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில், பி.பி.ஜி.டி சங்கர் தொடர்பான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 சொத்துகளை சென்னை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். சென்னை அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து பி.பி.ஜி.டி சங்கர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் பெரும்பாலும் பிபிஜிடி சங்கர் பினாமி பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ரவுடியாக இருந்து பலரது நிலங்களை அபகரித்து தனது பினாமி பெயரில் சொத்துக்களை குவித்துள்ளதாக சென்னை அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர் . சட்டபூர்வமாக நேரடியான தொழில் செய்து இந்த சொத்துக்களை வாங்காதது தெரியவந்துள்ளது .இந்த பினாமி சொத்துகள் குறித்து எந்தவித ஆவணங்களையும், சமர்ப்பிக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சொத்துக்களை வாங்க கொடுக்கப்பட்ட பணம் தொடர்பாக எங்கிருந்து வந்துள்ளது, என்பது குறித்து விசாரணையில் விளக்கம் அளிக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் மற்றவர்களிட,ம் இருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் என சென்னை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.மேலும் காஞ்சிபுரம் பகுதியில் ரவுடிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது. இனி இதுபோன்று காஞ்சிபுரம் பகுதியில் ரவுடியாக வலம்வரும் இன்னும் பல நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion