மேலும் அறிய
Advertisement
Crime: குடிபோதையில் அண்ணனை கட்டையால் அடித்து கொன்ற தம்பி கைது - வாலாஜாபாத் அருகே பரபரப்பு
கோபத்தில் கட்டையால் அடித்து அண்ணன் கொலை. தம்பி கைது, வாலாஜாபாத் போலீசார் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே திம்மையன்பேட்டை ஊராட்சி கீழ் தெருவில் வசிப்பவர் வடிவேலு. இவரது அண்ணன் சரவணன் திருமணம் ஆன நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் சரவணன் குடித்துவிட்டு தம்பி வடிவேலு வீட்டுக்கு சென்று தகராறு செய்து உள்ளார்.
குடிபோதையில் தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. கைகலப்பில் சரவணன் தம்பி வடிவேலுவின் கையை கடித்து விட்டதால் கோபமடைந்த வடிவேலு அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கி உள்ளார். படுகாயம் அடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே துடி துடித்து உயிரிழந்து உள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபாத் போலீசார் உயிரிழந்த சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி வடிவேலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதை தகராறு காரணமாக கோபத்தில் தம்பியே அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் வாலாஜாபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion