மேலும் அறிய
Advertisement
Crime : நாட்டு வெடிகுண்டை தயார்செய்த குட்டி ரவுடி..! தட்டித்தூக்கிய பொழுது, தடுக்கி விழுந்து மாவு கட்டு.. காஞ்சிபுரத்தில் நடந்தது என்ன?
ஏற்கனவே இவ்வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவந்த முக்கிய குற்றவாளி தடுக்கி விழுந்து கையில் மாவுகட்டு
குட்டி ரவுடிகளின் அட்டகாசம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடி, எளிதாக கிடைக்கும் பொருளாக மாறி இருந்துவந்தது. இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இதற்கென தனிப்படை அமைத்து தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கோவில் நகரமாக இருந்த காஞ்சிபுரத்தில் அவப்பொழுது குட்டி ரவுடிகளின் அட்டகாசம் இருந்து வந்தது.
வாடகை வீடு - மாநகராட்சி ஊழியர்
அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மாண்டூகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியில் ,ஒரு வீட்டில் சிலர் வாடிக்கை எடுத்து தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்வதாக அந்த தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவ்வப்போது அவ்வீட்டிற்கு சென்று வந்த காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்துவந்த சிவசங்கரன் என்பவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவ்வீட்டில் சிலர் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில் , தீடிரென போலீசார் அவ்வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்ததும், தயாரிக்க பயன்படுத்தி ஆணி, பால்ஸ் போன்ற மூல பொருட்களும் கத்தி உள்ளிட்ட பொருட்களும் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இதனையெடுத்து இதில் தொடர்புடைய சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி,அவனது நண்பர்களான திருத்தணியை சேர்ந்த ஜெயகுமார், சோமேஸ், லோகேஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சதி திட்டம்
மேலும் தனக்கு தொழில் போட்டு ரீதியாக எதிரியாக இருந்துவந்த ஆர்.கே என்பவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விக்கி (எ) பரிவட்டம் விக்கி தலைமறைவாக இருந்துவந்த நிலையில் போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
தடுக்கி விழுந்து கை உடைந்தது
இந்த நிலையில் தாயார்குளம் அருகே கஞ்சா விற்பனையாளர்கள் மணிகண்டன், வசந்த்குமார் ஆகியோருடன் பதுங்கி இருந்து வந்த நிலையில் போலீசார் இருவரையும் பிடித்துவிட பரிவட்டம் விக்கி என்கிற தப்பியோடியபோது கால் தடுக்கி கீழே விழுந்து நிலையில் போலீசாரிடம் பிடிபட்டார். இதனையெடுத்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாவு கட்டு போடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதை, ரவுடிசம், காஞ்சிபுரம்
சமீபகாலமாக காஞ்சிபுரம் பகுதியில் அதிக அளவு கஞ்சா வியாபாரம் நடைபெற்று இதன் காரணமாகவே குட்டி ரவுடிகள் உருவாக்குவதாகவும் உடனடியாக இரும்பு கரம் கொண்டு காவலர்கள் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதே காஞ்சிபுரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion