மேலும் அறிய

கள்ளக்குறிச்சி வழக்கு: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ்-ஐ சந்திக்கும் மாணவியின் தாயார்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணவழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரனை நீதிபதி சாந்தி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கபட்டனர். இவ்வழக்கு விசாரனை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருவதால் ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர்.

இந்நிலையில் 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்ககோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் மனு கடந்த 29 ஆம் தேதி  தாக்கல் செய்யப்பட்டபோது மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் நகலை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த மனுவை ஏற்க முடியாது எனவும் வழக்கு சிபிசிஐடி வசம் வழக்கு சென்றுவிட்டதால் சிபிசிஐடி பதிவு செய்த க்ரைம் நம்பரை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு கூறி 1 ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சாந்தி, சிபிசி ஐடி போலீசாரின் விசாரனை முழுமை பெறாததாலும்,  மாணவியின்  உடலை இருமுறை உடற் கூறு ஆய்வு செய்த அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்த பிறகு விசாரணை செய்யப்படுமென்று கூறி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கடந்த ஒன்றாம் தேதியன்று இறந்த மாணவியின் தாயார் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு மாணவியின் உடலை இரு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை கள்ளக்குறிச்சி மருத்துவகுழுவினர் ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்யும் குழுவிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரனை இன்று விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்த க்ரைம் எண்ணை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு கூறி முக்கால் மணி நேரம் வழக்கினை ஒத்திவைத்து மீண்டும் விசாரனைக்கு எடுத்துகொண்டார். அப்போது ஜிப்மர் மருத்துவ குழு இரண்டு முறை செய்யப்பட்ட உடற்கூறு ஆய்வின் அறிக்கையை ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையை கொண்டு தான் க்ரைம் எண் கொடுக்க முடியும் என தெரிவித்தால் வழக்கு விசாரனையை  வருகின்ற 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, மாணவியின் தாயார் தனது மகள் மரண வழக்கு 30 நாட்களை கடந்து விட்டதால் மர்ம மரண  வழக்கில் தாயின் உணர்வுகளை புரிந்து உண்மையை வெளி கொண்டுவர தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து கட்சி தலைவர்களை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியை கிருத்திகாவிற்கு சேலம் மத்திய சிறையில் கொலை மிரட்டல் இருப்பதாக கூறியும் திருச்சி சிறைச்சாலைக்கு மாற்ற கோரி ஆசிரியையின் தந்தை ஜெயராஜ் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget