கள்ளக்குறிச்சியில் நகை கடையை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை - விவசாய நிலத்தில் பங்குபிரிப்பு
கள்ளக்குறிச்சி: நகைகடையை உடைத்து 281 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை- விவசாய நிலத்தில் பங்குபிரிப்பு
கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் தங்க நகை, 30 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளையடித்த நகைகள் விவசாய நிலத்தில் பங்கு பிரிக்கப்பட்டது. சிதறிக்கிடந்த நகைகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள புக்கிரவாரி புக்கிரவாரி புதூர் கிராமத்தில் லோகநாதன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகை கடை கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திறக்கபட்டது. இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் நகைக்கடைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் நகைக்கடை முன்பு உள்ள இரும்பு கிரில்கேட்டை ஆக்ஷா பிளேடால் அறுத்து பின்னர் நகை கடையின் பூட்டு மற்றும் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை பெட்டகத்தை தூக்கி சென்றுள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் நகைக்கடை திறக்காமல் இருந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் தனது கடையை திறப்பதற்காக உரிமையாளரான லோகநாதன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் லோகநாதன் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது தனது நகைக் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 281 சவரன் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து லோகநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் லோகநாதன் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நகைக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ஆய்வு செய்தனர். நகைக்கடைக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் நகைகளை பங்கு பிரித்துள்ளனர்.
அந்த இடத்தில் காலியான நகைப் பெட்டிகளுடன் நகைகளும் சிதறி கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கொள்ளைக் கும்பல் குறித்த தடயங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் தலைமையிலான போலீசார், நகைக்கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்