மேலும் அறிய

விழுப்புரத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளி கைது

விழுப்புரத்தில் 1 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளி கைது.

விழுப்புரத்தில் நகை செய்ய கொடுத்த ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளுடன் தலைமறைவான நகை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தங்க நகை வியாபாரம்:

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் குமரன் மற்றும் சண்முகம், குபேரத்தெருவை சேர்ந்தவர் தீபக். இவர்கள் 3 பேரும் நகை தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் விழுப்புரம் நாப்பாளைய தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல் (39) என்பவரிடம் அவ்வப்போது தங்க கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி, மோதிரம், நாணல் உள்ளிட்ட பொருட்களை செய்வதற்காக தங்கக்கட்டிகளை கொடுத்து நகைகளை செய்து பெற்று வந்தனர். சக்திவேலுவும், அவர்கள் 3 பேரும் கூறியபடி உரிய நேரத்தில் நகைகளை செய்து கொடுத்து வந்துள்ளார்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த மே மாதம் 19-ந்தேதியன்று தீபக், மேற்கண்ட நகை உருப்படிகளை செய்வதற்காக சக்திவேலிடம் 450 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டியை கொடுத்துள்ளார். அதேபோல் குமரன், 200 கிராம் எடையுள்ள தங்கமும், ரூ.70 ஆயிரம் பணமும், சண்முகம் 1,600 கிராம் எடையுள்ள தங்கக்கட்டியையும் கொடுத்துள்ளனர். அதனைப்பெற்ற சக்திவேல், ஓரிரு மாதங்களில், நீங்கள் கேட்ட நகை உருப்படிகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.

தங்கக்கட்டியுடன் தலைமறைவு

மேலும் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் சக்திவேலின் கடைக்கு தீபக் உள்ளிட்ட 3 பேரும் அவ்வப்போது சென்று நகை வியாபாரம் விஷயமாக பேசி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தீபக் உள்ளிட்ட 3 பேரும் சக்திவேல் பட்டறைக்கு சென்றபோது அவரது பட்டறை பூட்டிக்கிடந்தது. அவரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டபோதிலும் அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. உடனே அவரது வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது சக்திவேல், வீட்டுக்கு வரவில்லை என்றும் எங்கு சென்றார் என தங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மோசடி செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், சக்திவேல் நகைகளையும் செய்து தராமல், வாங்கிய தங்கக்கட்டியையும் திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டாரே என்று எண்ணி மனவேதனை அடைந்த அவர்கள் 3 பேரும் இதுபற்றி விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சக்திவேல் மீது நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சக்திவேலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சசாங்சாய் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதோடு பல்வேறு இடங்களில் சக்திவேலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சக்திவேலை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை விழுப்புரம் அழைத்து வந்து கைது செய்து அவரிடமிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை (75 பவுன்) பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget