"காதுக்குள் யாரோ அழைக்கிறாங்க.." சென்னையில் ஐடி ஊழியர் விபரீத முடிவு- சிக்கிய ஷாக் கடிதம்
"காதுக்குள் ஏதோ ஒலி கேட்பதாக" கூறி ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு ஐடி ஊழியர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி ஊழியர் விபரீத முடிவு
சென்னை மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் நாராயணன் (24) அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது பெற்றோர் மற்றும் சகோதரர் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் ரோஷன் நாராயணன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து திருப்பதி சென்றவர்கள் இன்று அதிகாலையில் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டிப் பார்த்தும் திறக்கப்படவில்லை. இதையடுத்து பெற்றோர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது ரோஷன் நாராயணன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறி துடித்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
சிக்கிய ஐடி ஊழியரின் கடிதம்
வீட்டிற்குள் சென்று ரோஷன் நாராயணன் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்து செவிலியர்கள் ரோஷன் நாராயணன் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து ரோஷன் நாராயணன் தற்கொலை தொடர்பாக தகவல் அறிந்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் ரோஷன் தங்கி இருந்த அறையை சோதனை செய்தனர். தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
"தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஓர் ஒலி"
அதில், "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஓர் ஒலி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதாகவும், இதனால் மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக எழுதியுள்ளார். மேலும் சகோதரரிடம் ஏற்கனவே சண்டை போட்டதற்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், தாய்- தந்தையர் தன்னை மன்னித்து விடுங்கள் என்று ரோஷன் நாராயணன் கடிதம் எழுதி வைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு தற்கொலைக்கான காரணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.





















